பக்கம்:நனவோட்டங்கள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ரா. சீனிவாசன் அவள் அதிகம் பேசவில்லை. சில சொற்கள்தான் பேசுவாள். தொழிலில் ரொம்பவும் சுறுசுறுப்பாக இருந்தாள். அவள் உடம்பு என்னைக் கவரவில்லை. அவள் போக்கு என்னைக் கவர்ந்தது. அழகு என்பது அவள் வடிவில் இல்லை. அவள் செயலில் அழகைத் தவிர வேறெதுவும் என்னால் காண முடியவில்லை. அவளுக்குத் திருமணம் ஆகியிருக்கக்கூடாது என்பது என் பேராசை, அந்த வகையில் அவள் பெற்றோரோடு நான் பெரிதும் பழகியிருந்தேன். அந்தப் பேராசை அவளை என்னிடம் ஈடுபாடு கொள்ளச் செய்தது. நானும் இனிமையாகப் பேசினேன். நெஞ்சும் நினைவும் உறவாடின. இதயத் துடிப்புகளுக்குப் பேசும் சக்தி இருப்பதை அவளுடைய பழக்கத்தில்தான் தெரிந்து கொண்டேன். அவள் சொல்லித்தான் இந்தப் படத்துக்கு வந்தேன். 'அவர்கள் பார்க்க முடியவில்லை. அவளை அங்குதான் பார்க்க முடிந்தது. அன்று 2-90 வாங்காமலிருந்தால் அவள் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்திருக்கமாட்டாள். அவளுக்கு அது ஒரு விரதம். எனக்கு அது ஊதாரித்தனம். -90இல் இடம் காலியிருந்தும் நான் அதற்குப் போகவில்லை. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல், இது எங்கேயோ படித்திருக்கிறேன். எதிலும் கொஞ்சம் தாராளமாக இருப்பது பழக்கமாகிவிட்டது. இல்லாவிட்டால் அந்த ஒவியருக்கு ஏன் பத்துருபாய் தரவேண்டும். பணத்தைப் பிடித்து வைக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு எழுவதே இல்லை. அம்மா மட்டும் கடிந்து கொண்டே இருப்பாள், பணத்தைப் பத்திரப்படுத்த வேண்டும் என்பதில் அவளுக்கு நிரம்ப கருத்து இருந்தது. எனக்கு அப்படித் தோன்றுவது இல்லை. அவளுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை எனக்கு நிகழ்காலத்தில் மிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/34&oldid=772931" இலிருந்து மீள்விக்கப்பட்டது