பக்கம்:நனவோட்டங்கள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 33 நம்பிக்கை. அவளுக்குப் பேரன் வேண்டும். எனக்கு மனைவி வேண்டும். இதில் தான் அவள் எதிர்கால நினைவும் என் நிகழ்காலமும் வெளிப்பட்டன. தனிமை எனக்குப் பிடிக்காது. இனிமை எனக்குப் பிடிக்கும். யாரோடாவது பேச வேண்டும்; அல்லது பேசுவதைக் கேட்க வேண்டும். இந்தப் பழக்கம் தான் உஷாவிடம் நெருங்கிப் பழக வைத்தது. மற்றொன்று நாவல்களைப் படித்த பழக்கம். யாரைப் பார்த்தாலும் அவர்கள் எனக்கு மனிதர்களாகத் தெரிவதில்லை. கதாபாத்திரங்களாகத் தெரிகிறார்கள். அவர்கள் அனுபவங்களைக் கேட்டு அறிய வேண்டும் என்ற ஆவல் எப்போதும் என்னை உந்தும். "அவள் அந்தப் பத்து ரூபாயைக் கிழிக்காமல் இருந்திருந்தால் அவள் கால்களைத் தொட்டுப் பேச வைத்திருப்பேன். அவள்தான் என்னைப் பேசாமல் செய்து விட்டாளே. அந்தத் தைரியம் எனக்கு அப்போது வரவில்லை. இப்படி நினைக்கலாமா என்று என்னை நீங்கள் தவறாக தினைப்பீர்கள். உண்மைதான். காதலுக்கு கண் இல்லை என்ற படத்தை என்னோடு சேர்ந்து பார்த்திருந்தால் நீங்கள் என்னை மன்னித்து விடுவீர்கள். நீங்கள் தவறாகத் தான் நினைத்துக் கொள்ளுங்களேன். யார் வேண்டாம் என்று சொன்னது. அந்த இருட்டில் உங்கள் அபிப்பிராயத்தைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். அந்தக் கதை ஒரு போர். வழக்கமான நடிகர்கள். வழக்கமான கதை, பழக்கமான விமரிசனங்கள். ஒரு பிக்னிக்குப் போயிருந்தேன். அப்போது உஷாவின் தொடர்பு எனக்கு ஏற்படவில்லை. வேறு எனது நண்பர் களோடுதான் போயிருந்தேன். அந்த இடத்துக்கு ஒரு பஸ் வந்திருந்தது. அதில் அறுவைச் சங்கம் என்று போர்டு போட்டிருந்தது. அதில் இறங்கியவர்கள் விதம், விதமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/35&oldid=772932" இலிருந்து மீள்விக்கப்பட்டது