பக்கம்:நனவோட்டங்கள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ரா. சீனிவாசன் உடுத்தி இருந்தார்கள். இப்படிக் கூடவா சங்கங்கள் உற்பத்தியாகும். இந்தப் படம் பார்த்ததும் அந்தச் சங்கத்து உறுப்பினர்கள்தான் இதைத் தயாரித்து இருக்கவேண்டும் என்று நினைவுக்கு வருகிறது. அந்தப் பட்த்தைப் பார்த்ததில் எனக்கு நிறைவு ஏற்படவில்லை. ஆனால் அவள் வாழ்வில் கண்ட அந்த நிகழ்ச்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது. இப்படிக்கூட ‘பைத்தியம் இருக்குமா என்பதுதான் ஆச்சரியமாக இருந்தது. கணவன் நினைவிற்காகப் படம் பார்ப்பது என்பது ஒரு புதிய சம்பவமாக இருந்தது. அவள் கையில் பணமில்லாத போதும் 2-90க்கு வந்தாள் என்றால் அவளும் என்னைப் போல ஊதாரித்தனம் வாய்ந்தவளோ என்று எண்ண இடம் தந்தது; இல்லை. அவள் வாழ்ந்து கெட்டவள் என்பது மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மறுபடியும் எனக்கு அவள் மீது நினைவு தொடர்ந்து சென்றது. 'இண்ட்டர்வெல் முடிந்து படம் வழக்கம்போல் ஓடியது. அவள் கண்களைக் கவனித்தேன். கண்களில் கல கல' என்று கண்ணிர் விட்டுக் கொண்டிருந்தாள். அந்தப் படத்தைப் பார்த்துக் கண்ணிர் விடுவதற்கு ஒன்றுமில்லை. அது சிரிப்பதற்காக எடுத்தபடம். - எனக்கு அதுவும் வியப்பாக இருந்தது. ஏன் அவள் படம் பார்த்துவிட்டு அழவேண்டும்? மறுபடியும், அந்தக் கல்லறையே கவனத்திற்கு வந்தது. கணவனை நினைத்துக் கொண்டு அவள் கண்ணிர் விடுகிறாள் என்று நினைத்தேன். அழுகின்றவள் ஏன் திரைப்படம் பார்க்கவேண்டும் என்று நினைத்தேன். அந்த அழுகையை மறக்கத்தான் வந்திருப்பாள். மறுபடியும் அவளுக்கு அந்த அழுகை வந்து விட்டது. ஏன் அவள் அழுதாள் என்ற கேள்வியைக் கேட்டு விடுவது என்ற துணிவுக்கு வந்தேன். அது அவள் சொந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/36&oldid=772933" இலிருந்து மீள்விக்கப்பட்டது