பக்கம்:நனவோட்டங்கள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன. வோட்டங்கள் 35 விஷயம் என்ற முடிவுக்கு வந்தேன். ஒருவேளை அவளை நெருங்கியது அவளுக்கு வேதனையைத் தந்திருக்கலாம். அது அவளுக்கு ஒரு வெறுப்பைத் தந்திருக்கலாம் அல்லது அவள் கணவன் நினைவை உண்டாக்கியிருக்கலாம். எது உண்மைக் காரணம் என்பதைத் தெரிந்து கொள்ள முடிய வில்லை. ஏன் அதைப்பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும். மறுபடியும் அவளைவிட்டுச் சற்று விலகி உட்கார்ந்தேன். அதுக்கப்புறம் அவள் கண்கள் படத்தைத் தவிர வேறெதையும் பார்க்கவில்லை. நான் படத்தைப் பார்க்கவில்லை. அவளைப் பற்றியே என்மனம் சுழன்றது. இறைவன் அவளுக்கு அழகைக் கொடுத்திருக்கிறான்; இளமை தவழ்ந்து கொஞ்சி விளையாடுகிறது. ஏன் அவள் ஒரு புது வாழ்வை மேற்கொள்ளக் கூடாது. - என் மனம் உறுதிபட்டது. அவளை எப்படியும் மணம் செய்து கொள்வதென்று உறுதி கொண்டேன். அம்மா அவளுக்கு வேலை கொடுத்திருக்கலாம். அவள் எங்கள் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தால் நெருங்கிப் பழக வாய்ப்பேற்பட்டிருக்கும். சீர்திருத்தத்திற்காக மட்டுமல்ல, உண்மையில் காதலித்தே மணம் செய்து கொண்டிருக்க லாம். அப்போது காதலுக்குக் கண் கட்டாயம் இருந்திருக்கும். காதலே கண்களால்தான் பிறக்கின்றன என்று நினைக்கின்றேன். அவள் எங்கள் வீட்டு வேலைக் காரியாக அவசியம் தேவை என்று நினைத்தேன். டாக்டர் மு.வ.வின் 'கள்ளோ காவியமோ நினைவுக்கு வந்தது. அந்தக் கதையில் இப்படித்தான் காதல் வளர்கிறது, மங்கை ஒர் ஏழைப் பெண்; அனாதையாகக் கிடைத்த அவள் அந்த வீட்டு மருமகள் ஆகிறாள். அவள் கலியாணம் ஆகாதவள். இவள் இரண்டு குழந்தைகளுக்குத் தாய். அதை மறந்து விட்டேன். அவளைப்பற்றி நினைக்கும் பொழுது அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/37&oldid=772934" இலிருந்து மீள்விக்கப்பட்டது