பக்கம்:நனவோட்டங்கள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ( ரா. சீனிவாசன் நினைவே வருவதில்லை. அதுமட்டும் அல்ல. பழைய நினைவுகள் அவளைப் புது வாழ்விற்கு விடவில்லை. அவையே தடையாக இருந்தன. அவள் வேலைக்காரியாக மட்டும் வந்து என்ன பயன்? படம் முடிந்தது. அவள் இருந்த இடம் வெறுமை யுற்றது. அவள் எழுந்தாள்; எப்படி அவள் தனியே போவாள்? ஏன் அவளுக்குத் துணையாகப் போகக் கூடாது?" கேட்டுப் பார்க்கலாமே" சே! அவள் மறுபடியும் அங்கு அழுதாலும் அழுது விடுவாள். பிறகு என் நிலைமை மோசமாகப் போகலாம். ஏன் வேறு வகையாகக் கேட்டால் போகிறது. அவள் என்னை ஓவியரோடு பேசுவதைப் பார்த்திருக்கிறாள். அதனால் இப்படிக் கேள்வி கேட்டால் என்ன ? ஏன் ஒவியர் உங்களோடு வரவில்லையா? தனியாகவா வந்தீர்கள்? இதுவும் அவசியமில்லாத கேள்வி களாகப்பட்டன. ஒவியர் என்ன அவருக்குத் தந்தையா என்ன. அவள் தனியாக வந்தது தெரிந்தது இப்படிக் கேட்டால் அதுக்கு அர்த்தம் என்ன? நான் எதிர்பார்க்கவே இல்லை. திடீரென்று போலீஸ் காரன் வந்து வண்டியைக் கைகாட்டி நிறுத்துவான் என்று. உஷா மரியாதையாகப் பக்கத்தில் வந்து நின்றாள், என் நிலைமை ஒரு மாதிரியாகப் போய்விட்டது. "நீயும் இந்தப் படத்திற்குத் தான் வந்தாயா?" "நான் 'அவர்கள் பார்த்துவிட்டேன்" என்றாள். "உன்னோடு யாரும் துணையாக வர்வில்லையா?" "இல்லை நான் மட்டும்தான் வந்தேன்." அதற்குமேல் 'அவளோடு பேச முடியவில்லை. கூட்டத்தின் நெரிசலில் 'அவள் மறைந்துவிட்டாள். நான் உஷாவோடு தனித்து விடப்பட்டேன். பிறகு நாங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே சென்றோம். ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/38&oldid=772935" இலிருந்து மீள்விக்கப்பட்டது