பக்கம்:நனவோட்டங்கள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 37 "அவள் யார்" என்று கேட்டாள். "நான் கேட்கவில்லையே" "உங்களுக்குப் பழக்கமுண்டா?” "பழகினால் நல்லது என்று நினைத்தேன்" அவள் சிரித்தாள். அதில் ஒரு வேதனை கலந்து இருந்தது. "ஏன் சிரிக்கிறாய்?" "அவள் படம் பார்க்கும் போது அழுதாள்" "அதைக் கவனித்தாயா?” "கவனித்தேன் அவள் அழுதாள்! நான் சிரிக்கிறேன்" என்றாள். "நான் அழுதுகொண்டே சிரிக்கிறேன்" என்றேன். அது எங்கோ கேட்ட சினிமா வசனம் என்பது தெரியும். "அவள் ஒரு விதவை” என்றாள். "அப்படி என்றால்” “அவள் ஒரு கன்னிப்பெண் அல்ல. நீங்கள் காதலித்துப் பழகி மணமுடிக்க" என்றாள். அப்பொழுதுதான் எனக்குச் சமூக உணர்வே பிறந்தது. நான் சமுதாயத்துக்கும் பதில் சொல்லவேண்டிய ஆள் என்பதை அவள் பேச்சு நினைவுபடுத்தியது. "ஏன் ஒரு சிறிய புரட்சி" என்றேன். "அது அவசியமா என்று எண்ணிப் பார்க்க வேண்டியது" என்றாள். "எனக்கு அது அவசியமில்லை. அவளுக்கு அது நல்லது தானே" "இரண்டு பேருக்கும் அவசியம் என்றுபட்டால் தான் ஒரு காரியத்தை முடிவு செய்ய வேண்டும்" என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/39&oldid=772936" இலிருந்து மீள்விக்கப்பட்டது