பக்கம்:நனவோட்டங்கள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ல் ரா. சீனிவாசன் இந்தத் தத்துவம் எனக்குச் சிந்தனையைத் தந்தது. அவள் எனக்கும் அவசியமாகப்பட்டாள் என்பதை என் அடிமனம் சொல்லியது. எப்படியோ அவள் என் உள்ளத்தில் இடமும் பெற்று விட்டாள். இல்லாவிட்டால் நான் ஏன் ஒவியரிடம் நெருங்கிச் செல்கிறேன்? இதை எப்படி உஷாவிடம் சொல்ல முடியும். சில விஷயங்களைத் தான் வெளிப்படையாகச் சொல்ல முடியும். உஷா வந்து குறுக்கிடுவாளென்று எதிர் பார்க்க வில்லை. அவள் ஏன் என்னைத் தடுக்க வேண்டும். அறிவுள்ளவர் எவரும் இது தவறு என்றுதான் சொல்வார்கள். அதற்கு மேல் அந்தப் பேச்சுத் தொடர விரும்பவில்லை. "நீ தனியாகப் போக முடியுமா?" "அது பழகிவிட்டது" என்றாள். t எனக்கும் அவளைத் தொடர விருப்பமில்லை. இரண்டு பேரும் சேர்ந்துதான் படம் பார்த்தோம் என்று அவர்கள் வீட்டில் நினைப்பார்கள், அந்த நினைப்பை உண்டாக்க நான் விரும்பவில்லை. 4 சலனத்தின் இரண்டாவது படியில் காலெடுத்து வைப்பது போன்ற உணர்வு எனக்கு உண்டாகியது. அது என் மனம் உஷாவைச் சுற்றியபோது என்று நினைக்கிறேன். அம்மாவின் நினைப்பு வேறு விதமாக எண்ணச் செய்கிறது. இரண்டு நினைவுகளும் நீங்கிய பிறகு அம்மாவின் உணர்வோடு என் மனம் ஒன்றுபடுவதையும் பார்க்கிறேன். அம்மா சம்பிரதாயமான வாழ்க்கையை நடத்திய வர்கள். அவர்களுக்கு என்னைப்போல வாழ்க்கைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/40&oldid=772938" இலிருந்து மீள்விக்கப்பட்டது