பக்கம்:நனவோட்டங்கள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 39 பிரச்னையே ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அவர்கள் சொல்லுவார்கள் பெண்ணுக்குப் பெருமை அன்று இருந்தது என்று, காலா காலத்தில் மணம் நடந்தது. குழந்தைகளும் பிறந்தன. அவள் தாயானாள். வாழ்க்கை பூத்துக் காய்த்துக் கனிந்து முழுமை பெற்றது; மனநிறைவோடு வாழ்ந்து முடித்தாள்" இது அம்மா பெண்ணைப் பற்றிச் சொன்ன கதை. அவள் காலத்தில் அது நடந்தது. அது பழைய காலம். இன்று அவள் சொல்லவில்லை. நானே எண்ணிப் பார்க்கிறேன். பெண் திருமணம் ஆவதைத் தள்ளிப் போடுகிறாள். ஆண்களைப் போலவே அவர்களும் தள்ளிப் போடுகிறார்கள். இன்று பெண்ணுக்கு அவ்வளவு எளிதாக மணம் ஆவது இல்லை. இது நான் கானும் உலகம். நான் எங்கே கெட்டுத் தொலைகிறேனோ என்பதில் அம்மாவுக்குக் கவலை. அம்மா வாழ்ந்த உலகம் மன நிறைவான உலகம்; அவளுக்கு ஒரே ஒரு முறைதான் வாழ்க்கை என்னைப் பெற்றாள், எதிர்பாரா விதமாக அப்பாவை இழந்தாள். அவள் ஒரு விதவை என்பது மறக்கப்பட்ட நிகழ்ச்சி. அவள் ஒரு தாய் என்பதே நடைமுறை நிகழ்ச்சி. அவள் ஒரு விதவையாகிவிட்டதற்காகக் கவலைப்பட்டதாகத் தெரிய வில்லை. அதை எப்படி நான் அறிய முடியும். என்னைப் பொறுத்தவரை அவள் எனக்குத் தாயாகவே காணப் பட்டாள். அவளுக்கு ஒரு துடிப்பு இருந்து கொண்டே இருந்தது. மறுபடியும் அவள் தாய்மை பெற விரும்பினாள். பேரனை அல்லது பேர்த்தியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை பாவம் அவள் மட்டும் என்ன செய்வாள். யாராவது வந்தவுடனே அவளைக் கேட்கும் கேள்வி இதுதான். 'எப்ப உங்கள் பிள்ளைக்குக் கலியாணம்?" "பேரன் பேர்த்தி எப்ப எடுக்க போறே"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/41&oldid=772939" இலிருந்து மீள்விக்கப்பட்டது