பக்கம்:நனவோட்டங்கள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 41 "அதற்காக நான் அசிங்கமான பெண்ணை மணம் செய்து கொள்ள மாட்டேன்" என்று அடித்துப் பேசுவேன். அம்மாவுக்குப் பரம திருப்தி, அழகான ஒருத்தியே மருமகளாக வரவேண்டும் என்ற கற்பனை அவள் முகத்தில் புதிய அழகைத் தோற்றுவித்தது. "ஏன் மா அழகையே பார்த்தால்?" என்று கொஞ்சம் மாறுபட்டும் பேசுவேன். அதற்குமேல் பேசவில்லை. அம்மாவின் மனம் புண்படும் என்று தெரியும். அப்பா அம்மாவை எப்படி விரும்பி மணம் செய்து கொண்டிருப்பார் என்ற நினைவு எனக்குள் தோன்றியது. அம்மாவும் அப்பாவும் ஒரு படம் எடுத்திருந்தார்கள். அது கூடத்தில் அழகாக மாட்டப்பட்டு இருந்தது. அம்மா மணப் பெண் கோலத்தில் இல்லாவிட்டாலும் மங்கலமான கோலத்தில் இருந்தாள். பெரிய பொட்டு; காஞ்சிபுரம் பட்டு, கை நிறைய வளையல்கள். அப்பா சூட் போட்டுக் கொண்டிருந்தார். அது கல்யாணத்துக்குத் தைத்துத் தந்தார் களாம். கலியாணத்துக்கு எடுத்த கோட்டு; அதற்கப்புறம் இந்த போட்டோவுக்காகத்தான் பயன்பட்டு இருக்கும். அதுக்கப்புறம் அது அவருக்குப் பயன்பட்டதாகத் தெரிய வில்லை. அம்மா அதை எனக்குக் கொடுத்தாள். உனக்குச் சரியாக இருக்கும் என்பாள். அதை நான் ஒருநாள் போட்டுப் பார்த்தேன். அவருடைய பாண்டும் மடிப்புக் கலையாமல் இருந்தது. இரண்டும் மாட்டிக் கொண்டு கண்ணாடி முன் நின்றேன். நானே சிரித்துக் கொண்டேன். அம்மா அப்படியே பார்த்து நின்றார்கள். அவர்கள் நினைவு எங்கோ சென்றது. கண்களில் நீர் பெருகியது. "ஏன்மா அழறே! நல்லா இல்லையா” என்று கேட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/43&oldid=772941" இலிருந்து மீள்விக்கப்பட்டது