பக்கம்:நனவோட்டங்கள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ரா. சீனிவாசன் "ஆனந்தக் கண்ணிர்" என்றாள். "ஆபீசுக்குப் போட்டுக் கொண்டு போ நன்றாக இருக்கும்” என்றாள். “ஆபீஸ் அதற்கு நன்றாக இல்லை." என்று சொன்னேன். அப்பா வாழ்ந்த காலம் வேறு; வெள்ளைக்காரன் அடிமைப்படுத்திய காலம். அவர்களோடு நெருங்கிப் பழக வேண்டிய காலம். அவனைப் போலவே உடுத்திச் சென்றால் அவன் சமமாக நடத்தினான். அது அவசியமாக இருந்தது. “காந்தி வட்டமேஜை மாநாட்டுக்குச் சென்றார். அவர் கோட்டும் சூட்டும் அணியவில்லை" என்றேன். "அவரே பார் அட்லாவாக வெளிநாட்டில் தொழில் செய்தபோது சூட்தான் அணிந்திருந்தார். நினைத்திருந்தால் அவர் சூட்டும் கோட்டும் போட்டுப் போயிருக்கலாம். அவருக்கே அதற்கு மடிப்பும் போடத் தெரியும். போட வில்லை. இந்திய சராசரி மனிதனின் பிரதிநிதியாகச் சென்றார்” என்று மேலும் தொடர்ந்தேன். சிலர் வெளிநாட்டுக்குப் போகும்பொழுது திடீர் வேஷங்கள் போட்டுக் கொள்கிறார்கள். அதுக்கு விளம்பரம் வேறு தந்து அவர்கள் படங்களைப் பத்திரிகைகளில் போடுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சி வந்தது. சுதேசிய உடையில் ஆபீசுக்குச் செல்லலாம் என்று சொன்னார்கள்; அதுக்கப்புறம் இந்த வெளிப்பகட்டு மறைந்துவிட்டது. இந்தக் கல்லூரிகளில்தான் இநத் ஆசிரியர்கள் சூட்' அணிந்து கொண்டு செல்கிறார்கள். அது அவர்களுக்கு யூனிபாரம் ஆகிவிட்டது. போலீசுகாரன் காக்கி சட்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/44&oldid=772942" இலிருந்து மீள்விக்கப்பட்டது