பக்கம்:நனவோட்டங்கள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் , 43 அணிகிறான். இவர்கள் டை கட்டிச் சூட்டுப் போடு கிறார்கள். நான் பத்தாவது படித்துக்கொண்டு இருந்தேன். கணக்கு வாத்தியார் எப்பொழுதும் சூட்டில் தான் வருவார். ஆள் மெலிசாக இருந்தார். கிராப்புப் பின்பக்கம் வாரிக் கொண்டிருந்தார். அதை அமெரிக்கன் கிராப்பு என்று சொல்வார்கள். துண்டு மீசையும் வலதுபக்கம் வாரிய கிராப்பும் இருந்தால் இட்லர் கிராப்பு என்று சொல்வார்கள். அவர் 'டை மிக அழகாக இருக்கும். மிகவும் சுத்தமாக இருப்பார். கையில் பொன் சங்கிலி கடிகாரத்தைக் கட்டி இருப்பார். அது அவர் மணமான புதிது. அந்த ஆசிரியரை நான் எப்பொழுதும் மறக்க முடியாது. எப்பொழுதாவது மழைக்காலம் வரும். அவர் இந்திய உடையில் வருவார். அப்பொழுது பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு வருவார். அது அந்தக் காலத்து இந்திய உடை. முழுவதும் கதர்தான் அணிவார். வகுப்பு நடத்தும் பொழுது பாடத்தைத் தவிர வேறு எதையும் பேசமாட்டார். கண்ககுகளைப் போர்டில் போட்டுக் காட்டுவார். அப்படியே பார்த்து எழுதிக் கொள்வோம். அவர் மிகவும் இனிமையான மனிதராக இருந்தார். அவரை இந்த இரண்டு உடையில்தான் பார்த்து இருக்கிறேன். இப்பொழுது அவர் ஒய்வு பெற்றுவிட்டாராம். வாய்நிறைய வெற்றிலைப்பாக்கு: சிவந்து இருக்கும்; என்னைப் பார்த்துச் சிரிப்பார். நான் வெறும் மக்கு என்பது அவர் அபிப்பிராயம். முன்னுக்கு வர முடியாதவர்களில் நானும் ஒருவன் என்று நினைத்து வந்தார். இப்பொழுது அவரைவிட நான் கொஞ்சம் அதிகம் சம்பளம் வாங்குவதைக் கண்டு அவரே கொஞ்சம் வெட்கப் பட்டார் என்றுதான் சொல்ல முடியும். படிக்கும்பொழுது இந்த ஆசிரியர்களைப் பற்றிப் பிரமாதமாக நினைத்து இருக்கிறேன். படித்து முடித்த பிறகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/45&oldid=772943" இலிருந்து மீள்விக்கப்பட்டது