பக்கம்:நனவோட்டங்கள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 ரா. சீனிவாசன் வெளியுலக வாழ்க்கையை வைத்து ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது இவர்கள் சாதாரணமாகவே காணப்பட்டனர். வளர்ச்சியே இல்லாதவர்கள் என்ற அபிப்பிராயம் உண்டாகிவிட்டது. அவ்வாறு நினைப்பது தவறுதான். அதற்காக அவ்வாறு நினைக்காமலும் இருக்க முடிவது இல்லை. அம்மா நான் சூட்டோடு இருப்பதைக் கண்டு ரொம்ப சந்தோஷம். மறுபடியும் என் மணநாளில் அந்தக் காட்சியில் இருப்பேன் என்று நினைத்தாள். நானும் கல்லூரி முடிந்த நாளில் அதாவது ஆண்டுவிழா அன்று பிரமாதம். பக்கத்து ரூம் நண்பன் கோட்டை இரவல் வாங்கி மாட்டிக் கொண்டேன். அது கொஞ்சம் தொளதொள' என்றே இருந்தது. எல்லோரும் அவரவர் இயன்ற அளவு புதிய உடையில் காணப்பட்டார்கள். எனக்கு அது நியாயமாகப் பட்டது. காலில் பூட்சு போட்டாலே ஒரு புதிய தெம்பு, மிடுக்கு என் நடையில் அமைந்துவிட்டது. அது ஒரு ஒழுங்கைக் கற்பித்தது போல் இருந்தது. அதுவும் ஒரு அனுபவமாக எடுத்துக் கொண்டேன். நான் ஆபீசுக்குப் போகும்போது முன் சொன்னேனே, 'தியாகபூமி ரீதர் ஜிப்பா உடை அதுதான் எனக்குப் பிடித்து இருந்தது. என்னைப்போல் ஒல்லியாக இருப்பவர்க்கு அது ஏற்ற உடை என்று நினைக்கிறேன், அது எனக்குப் பிடித்து இருந்தது. அது மெதுவாக வசதி படைத்த மார்வாடிக்காரர்களின் உடை என்பதைப் பிறகு தான் தெரிந்து கொண்டேன். அதை இந்த நாட்டுத் தேசிய உடையாக நினைத்து வந்தேன். அது அப்படியே எனக்குப் பொருத்தமாகவே இருந்தது. என்னை எல்லோரும் எழுத்தாளர் என்று கிண்டல் செய்தார்கள். அது எழுத்தாளன் உடையாகும். நான் பார்த்த தமிழ் எழுத்தாளர் யாரும் அப்படி இல்லை. நா. பா அந்த உடையில் பார்த்திருக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/46&oldid=772944" இலிருந்து மீள்விக்கப்பட்டது