பக்கம்:நனவோட்டங்கள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 45 'அகிலன் அப்படி இல்லை. ஜெயகாந்தன் அவர் தனி. மு.வ. நான் சரியாகக் கவனித்தது இல்லை, சோ அந்த மொட்டைத் தலைதான் கவனத்துக்கு வருகிறது, மேலும் அவரை நடிகராகப் பார்த்து வருவதால் அவர் உண்மை வடிவம் நினைவில் நிற்பதில்லை. ஜெகசிற்பியன் அவரை நான் பார்த்தது இல்லை, சாண்டில்யன் அவர் கோயிலில் இருக்க வேண்டிய குருக்கள். 'சுரதா அவர் இந்த உடை தான். அவருக்கு அது பொருத்தமாக இருக்கிறது. கவிஞருக்கு ஏற்ற உடை, சால்வைப் போர்வையில்தான் அவரைப் பார்த்திருக்கிறேன். கண்ணதாசன் அரைச் சட்டை என்று நினைக்கிறேன். எப்படியோ என்னை இந்த உடையில் எழுத்தாளன்' என்றே அழைத்தார்கள். இதுவரை ஒரு கதையும் எழுதியதில்லை; ஆனால் பிறர் கதையைக் கேட்பதில் மட்டும் ஆர்வம் குறையாமல் இருந்தது. பழைய கதா பாத்திரங்களின் உடையும் இப்படித் தான் ஓவியர்கள் தீட்டினார்கள், அதனால் அந்த ஒவியங் களுள் நானும் ஒருவனாகக் காணப்பட்டேன். என் உடைகளை என்னால் மாற்றிக்கொள்ள இயலவில்லை. அந்த வகையில் நான் ஒரு முதியவன் ஆகிவிட்டேன். உடையில் ஒருவகை அமைதி ஏற்பட்டுவிட்டது. பட்டாம் பூச்சி போலப் பறக்க வேண்டிய நான் பகட்டே இல்லாமல் உடை உடுத்தினேன். இது அவசியம் இல்லாத விஷயம் தான். இதைப் பேசுவதால் வாசகர்களுக்கு என்னைப் பற்றி ஒரு வெறுப்புத்தான் உண்டாகும். வெறுக்கத்தக்க விஷயங் களையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இதைப்பற்றி நினைக்க வேண்டியிருக்கிறது. "ஒரு சிலர் தாடி வளர்த்துக் கொள்கிறார்கள்" என்றேன் அம்மாவிடம். "அது ஒன்றுதான் குறைவு' என்று அம்மா சொல்லுவார்கள். அவ்வளவு தூரத்துக்கு நான் துறவியாக அம்மாவுக்குக் காணப்பட்டேன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/47&oldid=772945" இலிருந்து மீள்விக்கப்பட்டது