பக்கம்:நனவோட்டங்கள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 : ரா. சீனிவாசன் ஒரு சிலர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விடுகிறார்கள். அந்த மனநிலையில் தாடி வளர்ந்து விடுகிறது. அதுக்கப்புறம் அந்தத் தாடி நின்று விடுகிறது. விரக்தியும் அவர்களை விடுவதில்லை. பிறகு அவர்கள் கலகலப்பாகப் பழகுவதை மறந்து விடுகிறார்கள். என்னோடு ஆபீசில் பலர் வேலை செய்கிறார்கள். அவர்கள் புதுப்புது விதமாகத் தாடி வளர்க்கிறார்கள். பழைய காலத்தில் ஆங்கிலேயர்களின் படங்கள் இப்படித் தான் இருக்கும். அது தமாஷாகத்தான் இருக்கிறது. இவர்கள் பாதி விரக்திமனம் படைத்துக் கொண்டார்கள் என்று தான் நினைப்பேன். பாதித் துறவிகள் என்ற நினைவு வருவது உண்டு. நானும் ஒரு துறவியாகத்தான் ஆகிவிடுவேன். அது மிகவும் சுலபம். இந்தச் சுலபமான வேலையை மேற் கொள்கிறவர்களை இந்தச் சமுதாயம் மதிக்கிறது; வழிபடுகிறது. அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. அப்படி வழிபடுகிறவர்களும் இந்தச் சோம்பேறித்தனமான வாழ்க்கையை விரும்புகிறார்கள் என்றுதான் எனக்குப் படுகிறது. அவ்வப்பொழுது மனச் சலனங்கள் ஏற்படும். அதற்கு அவர்கள் அஞ்சுகிறார்கள். சலனம் மனிதர்களுக்கு ரொம்ப அவசியம் என்று தான் நினைத்தேன்; நினைக்கிறேன்: அம்மா மட்டும் திட்டுவார்கள் "உனக்கு ரொம்ப சலனபுத்தி என்பார்கள். - அது உண்மைதான் நறுக்கென்று அம்மா சொல்கிற படி ஏதாவது ஒரு கன்னியைக் கைபிடிக்க வேண்டியது தானே. என்ன அழகான் தொடர் கன்னியைக் கைபிடிக்க வேண்டுமாம். அவள் கன்னி அல்ல; கழுத்தில் தாலி இருந்தது; அதை அவள் மூடிவைத்தாள். ஆனால் அது நான் இருக்கிறேன் என்று வெளியே தலைகாட்டிக் கொண்டிருந்தது. அது ஊசலாடிக் கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/48&oldid=772946" இலிருந்து மீள்விக்கப்பட்டது