பக்கம்:நனவோட்டங்கள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 47 அதைப் பார்க்கும்பொழுது எனக்குத் திரைப் படத்தின் தலைப்பு நினைவுக்கு வந்தது. தாலியா சலங்கையா பாவம் அவள் தாலி கட்டிக்கொள்ள வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டாள். ஆனால் அதிக வெற்றி பெறவில்லை. காலில் சலங்கை ஏறியது. நா. அந்தப் படத்தைப் பார்க்கவில்லை. ஆபீசில் அதைப் பற். பேசிக் கொண்டிருந்தார்கள். மிகவும் உருக்கமான என்றார்கள். ஏதோ சமூதாயத்தில் கொடுமையைச் சித்திரிக்கு: படமாக இருந்தால் அதை உருக்கமான படம் என்கிறார்கள். அந்தக் கொடுமையைப் போக்க வேண்டும் என்று நினைப்பதைவிட அதற்காக இரக்கப்படுவதைத்தான் பலரிடம் காண முடிகிறது. படம் பார்த்து விட்டு அழுகிறவர்களைக் கண்டிருக்கிறேன். நான் அப்படியே அழுதுவிட்டேன் என்று அவர்கள் சொல்லக் கேட்டிருக் கிறேன். நேராக ஒர் அவல நிகழ்ச்சியைக் கண்டால் அதை உதாசீனப்படுத்துவதையும் பார்க்கிறேன். அதுவும் உண்மைதான். நம் அழுகையை யாரோ ஒரு சிலருக்காக ஒதுக்கி வைக்க வேண்டியுள்ளது. எதற்கெடுத் தாலும் அழுதுகொண்டேயிருந்தால் அதற்கு ஒரு முடிவு ஏற்படுவதில்லை. நமக்கு வருகிற ஒரே துக்கத்துக்குத் தான் நம் அழுகையைப் பத்திரப்படுத்தி வைக்கிறோம். அம்மா கடைசியாக அழுதது ஒரு முறைதான். அப்பா அவர்களை விட்டுப் பிரிந்த போது. எத்தனையோ பேர் செத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். அதற்கெல்லாம் அவர்கள் அழுவது இல்லை. அழமுடியாது. அழுகைகூட நாம் ஒரு சிலருக்கு என்று ஒதுக்கிவைக்கிறோம். அதே போலச் சிரிப்பு கூட ஒரு சிலருக்காகவே ஒதுக்கி விைக்கிறோம். உஷாவோடு சிரிக்க வேண்டுமென்ற ஆசை அவளிடம் என்னை இழுத்தது. அவள் தன் அழுகையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/49&oldid=772947" இலிருந்து மீள்விக்கப்பட்டது