பக்கம்:நனவோட்டங்கள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ( ரா. சீனிவாசன் நான் கேட்க வேண்டுமென்று விரும்பினாள். அதை என்னால் தடுக்க முடிவதில்லை. அவள் அழுகை என் நெஞ்சை உருக்கியது. அவள் அழுகையைத் துடைத்துக் கண்ணிரை மாற்ற வேண்டும். அது என் ஆர்வமாக இருந்தது. அழுகையை மாற்றினால்தானே ஒருவரைச் சிரிக்க வைக்க முடியும். 5 Tேப்பொழுதும் மனம் நல்லதையே நாடுகிறது. ஆனால் எது நல்லது என்பதை அறிவதில்தான் கலக்கம் ஏற்படுகிறது. அதைவிட வாழ்க்கையில் லட்சியத்தைப் புகுத்துவதா. அலட்சியமாக வாழ்வதா என்பதிலேயே மனம் சலனமடைகிறது. சில சமயம் வாழ்க்கையில் லட்சியப்பிடிப்பே ஏற்படுவதில்லை. சில சமயம் உயர்ந்த லட்சியங்களுக்காக வாழவேண்டுமென்கிற ஆசை உண்டாகிறது. அம்மாவைப் பொறுத்தவரையும் அவளுக்கு லட்சியம் இருந்தது. என்ன லட்சியம்: வழக்கமான பாதை. சம்பிரதாயமான வாழ்க்கை - அவள் ஏன் அன்று சினிமாவிற்கு வந்தாள். வந்தவள் எப்படி உயர்வகுப்பில் இருந்தாள். வேலைக்காரி எப்படி அங்கு வந்து உட்கார முடியும், அவளிடம் ஏன் என் மனம் சென்றது. சொல்லக் கூடாதுதான். யாரிடமே சொல்லக் கூடாது. அப்படித்தான் பெரியவர்கள் சொல்லுகிறார்கள். கடவுள் இடத்திலே மனம் சென்றுவிட்டால் இப்படிச் சலனங்களே ஏற்படாது என்று சொல்லுகிறார்கள். சலனமே இல்லாத வாழ்க்கையில் என்ன இருக்கிறது. நீலக்கடலில் அலைகள் ஓய்ந்த நிலையில் சலனம் ஏற்படுவ தில்லை. தரையில் சதா அலைகள் மோதிக் கொண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/50&oldid=772949" இலிருந்து மீள்விக்கப்பட்டது