பக்கம்:நனவோட்டங்கள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 49 இருக்கின்றன. எழுந்து ஒவென்று கதறி கீழே விழுந்து பின்வாங்கிச் செல்கிறது. வானத்தில் சலனமில்லை. நீலக்கடலில் சலனம் இருக்கத்தான் செய்கிறது. வானத்தில் விண்மீன்கள் சிமிட்டிக் கொண்டிருக்கின்றன. நீரலைகளில் இரைச்சலைத் தவிர வேறு என்ன இருக்கிறது. சதா இரைச்சல்தான். அந்த இரைச்சல்தான் என்ககுப் பிடிக்கிறது. அப்படிப் பழகிவிட்டேன். மோனநிலை என்ற ஒரு நிலைமை நான் எட்டிப் பிடிக்கவேண்டும் என்ற ஆசை தோன்றுவதில்லை. மறுபடியும் 'அவளைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை உந்தியது. அவளை மறுபடியும் உந்து நிலையத்தில் ஒவியரோடு பார்த்தேன். அந்தக் குழந்தைகள் அவளோடு ஆடிக் கொண்டிருந்தன. அந்தக் குழந்தைகள் பழைய சட்டைகளை அணிந்துகொண்டு இருந்தன. அவள் நன்றாக இருந்த காலத்தில் தைத்திருக்கவேண்டும். அவள் அங்கே ஒரு பழக்கடை வைத்திருந்தாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. யாரும் தாழ்ந்துவிடுவதில்லை. முயற்சி அவர்களை வாழவைக்கிறது. ஒவியரின் உதவி அவளுக்கு இந்த வாழ்க்கையை ஏற்படுத்தியது என்பதை ஊகிக்க முடிந்தது. அன்று அந்தத் திரைப்படத்தில் அவள் பக்கத்தில் எதிர்பாராத விதமாக உட்கார்ந்து விட்டேன். என் உடம்பு அவள் உடம்பில் உராசியது. ஸ்பரிச உணர்ச்சிக்குத் தனி ஆற்றல் இருந்ததை உணர முடிந்தது. ஆனால் அவள் மட்டும் கல்லைப் போலவே இருந்தாள். அவள் நெஞ்சம் உறைந்து போய்க் கிடந்ததென்று நினைக்கிறேன். வறுமை வாழ்க்கையில் வழி தவறச் செய்யும் என்று கதைகளில் படித்திருக்கிறேன். என் பணத்திமிர்தான் என்னை வழி தவறச் செய்தது என்பதை உணர்ந்தேன். வெறும் பணத்திமிர் என்று கூறமுடியாது. மற்றவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/51&oldid=772950" இலிருந்து மீள்விக்கப்பட்டது