பக்கம்:நனவோட்டங்கள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 ரா. சீனிவாசன் செய்யாத, செய்ய விரும்பாத செய்ய முடியாத காரியத்தைச் செய்ய வேண்டும் என்ற ஆசையே அவளைச் சுற்றி வட்டமிடச் செய்தது. அவளிடம் எப்படியாவது பேசவேண்டும் என்பதற்காகவே சுற்றினேன். ஒழிந்து போகட்டும் என்று விட்டுவிடுகிறேன். சே! ஒரு பழக்கடைக் காரியையா காதலிப்பது. வேலைக்காரியைக் காதலித்து மணம் செய்து கொண்டதாகக் கதை இருக்கிறது. பழக்கடைக் காரியைக் காதலித்ததாகக் கதை இல்லையே. இனி நான்தான் அந்தக் கதையை எழுதவேண்டும். அன்று ஒவியர் அங்கு வரவில்லை. ஒவியம் எழுதவில்லை. அந்த ஒவியரைப் பற்றி என்னால் புரிந்து கொள்ள இயல்வதில்லை. அங்கே மற்றொருவர் சுவர்களில் அன்றாடச் செய்திகளைச் சாக்குத் துண்டில் எழுதிக் கொண்டிருந்தார். அவர் ஏன் வேலை கெட்டு இதை எழுதிக் கொண்டிருக்கிறார். அதை ஒரு தொண்டாக அவர் கருதுகிறார் என்று நினைக்கிறேன். சில பேர் ஒய்வு பெற்றுவிட்டால் இன்னது செய்வதென்று தெரியாமல் திகைப்பார்கள். ரயில் நிலையத்தில் ஸ்டேஷன மாஸ்டர் ஆக இருந்த ஒருவர் அவருக்குப் பொழுது போக வேண்டுமென்றால் மறுபடியும் அங்கே சென்றால்தான் அவருக்குத் தெம்பு. ரயில்வே செய்திகளை 120, 17 இப்படி ரயில் எண்களைச் சொல்வதிலே சுவராசியம் இருக்கிறது. வைத்தியர்கள், வக்கீல்கள் இவர்கள் மட்டும் ஒய்வே எடுத்துக் கொள்வதில்லை. ஆசிரியர்கள் ஒய்வெடுத்துக் கொண்டால் அது ரொம்ப பரிதாபகரமாக ஆகிவிடுகிறது. அவர்களிடம் டியூஷன் கூட யாரும் சென்று படிப்பதில்லை. பாவம் அப்புறம் அவர்கள் எதையோ பறி கொடுத்துவிட்டதைப் போல அந்தப் பழைய பள்ளிக்கூடப் பக்கம் போய்ப் பார்த்து வருவதில் திருப்தி, நம் ஒவியருக்கும் தம் படங்களை யாராவது பார்க்க வேண்டும் என்பதில் ஒரு திருப்தி. சிலர் நிறைய காசு செலவு செய்து புத்தகம் போட்டு, விடுகிறார்கள். விழாவும் எடுக்கிறார்கள். அதோடு அந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/52&oldid=772951" இலிருந்து மீள்விக்கப்பட்டது