பக்கம்:நனவோட்டங்கள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 ரா. சீனிவாசன் இவள் இவ்வளவு துணிவாகப் பேசுவதைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன். சில சமயம் அனுபவங்கள் தைரியம் கொடுக்கின்றன என்பதை அறிய முடிந்தது. "கடையில் பல பேருடன் பழகிய பிறகு எதையும் தைரியமாகப் பேசக் கற்றுக்கொள்ள முடிகிறது" என்பதைத் தெரிந்து கொண்டேன். அவள் பேசியது கிண்டலுக்கு என்பதையும் தெரிந்து கொண்டேன். "ஒய் ! உனக்குக் கல்யாணம் ஆச்சா?” என்று கேட்டாள். "இல்லை" என்றேன். "பாவம், அதுதான் இந்தச் சலன புத்தி" என்று வெடுக்கென்று சொன்னாள். "உனக்குக் கல்யாணம் ஆச்சா" என்று வேண்டு மென்றே கேட்டேன். "அதோ அந்தக் குழந்தைகளைக் கேள்" என்று பதில் சொன்னாள். அதற்குமேல் அவளிடம் பேசத் தெரியவில்லை. "ஒவியர் வரவில்லையா?" "அவர்தான் வீட்டைக் கவனித்துக் கொள்கிறார். எனக்காக வீட்டில் சமையல் செய்து வைப்பார்." எனக்கு ஆச்சரியமாக இருந்தது. "ஏன், அவருக்கு வீடு வேறு இல்லையா?" "இருக்கிறது; அது அவர் எனக்குச் செய்யும் உதவி. எனக்கு வியாபாரம் தொடங்க முதல் தந்ததும் அவர்தான். அவர் என் குடும்பத்து நெருங்கிய நண்பர். அந்தக் குடும்பத்திலேயே அவர் ஒரு காந்தி". “காந்தி இல்லையே".

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/54&oldid=772953" இலிருந்து மீள்விக்கப்பட்டது