பக்கம்:நனவோட்டங்கள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 53 “காந்தி இல்லையா? அவர் தத்துவம்தான் அவரை மாற்றிவிட்டது.” ஒவியரைப் பற்றி உயர்ந்த எண்ணம் உண்டாயிற்று. வினோபாவை நான் பார்த்தது இல்லை. கேள்விப்பட்டு இருக்கிறேன். அவர் இப்படித்தான் இருப்பாரா என்று எண்ணத் தொடங்கினேன். ஒரு சில வினோபாக்கள் இருப்பதால்தான் சமுதாயம் இன்னும் லட்சியங்களைப் பற்றிப் பேசுகின்றது என்று நினைத்து மகிழ்ந்தேன். "அவர் ரொம்பவும் வருத்தப்படுகிறார்." "எதற்காக?" "இந்தக் குழந்தைகளை வைத்து நான் எப்படிக் காப்பாற்றுவேன் என்று,” "அனாதை இல்லங்களில் சேர்த்து விடலாமே. நான் வேண்டுமானால் எழுதித் தருகிறேன்." "இப்படித்தான் பல பேர் நினைக்கிறார்கள். பிச்சைக் காரர்களா ? சரி அவர்களுக்கு ஒரு விடுதி கட்டு; நோயாளிகளா? அவர்களுக்கு ஓர் ஆஸ்பத்திரி கட்டு; பையன்களா? அவர்களை உடனே பள்ளிக்கூடம் அனுப்பு. இதுதான் ஒவ்வொருவரும் சொல்வது, இந்தக் குழந்தைகளும் இந்த நாட்டு நன்மக்களாக உருவாக வேண்டாமா? அந்த ஆசை பெற்றவருக்கு இருக்காதா? அதைப்பற்றித்தான் அவர் கவலைப்படுகிறார்". "மேல் நாட்டிலே விதவைகள் மணம் செய்து கொள்கிறார்களே, அது தப்பு என்று நினைக்கிறாயா?" "அங்கே பெண்ணை மதிக்கிறான்; இங்கே பெண்ணை மிதிக்கிறான். கல்யாணமான பெண்களையே சரியாக வைத்து வாழத்தெரியாத நாட்டிலே விதவையைக் கல்யாணம் பண்ணிக்க எவன் முன்வருவான். கல்யாண மான மனைவியையே சாந்தி முகூர்த்தத்திலேயே இவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/55&oldid=772954" இலிருந்து மீள்விக்கப்பட்டது