பக்கம்:நனவோட்டங்கள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 55 "நன்றாக யோசனை பண்ணிச் சிந்தித்து முடிவு செய். நான் உனக்கு மனைவியாக இருப்பது என்றால் இந்தக் குழந்தைகளுக்கு நீ தகப்பனும் ஆகவேண்டும். அதையும் யோசித்துப்பார்" என்று அடுக்கிக் கொண்டே போனாள். சந்திக்கு வந்த பிறகு எவ்வளவு தைரியம் வருகின்றது என்று எண்ணி வியந்தேன். அவளிடத்தில் மென்மை இருக்குமென்று எதிர் பார்த்தேன். வன்மை மிகுதியாக இருந்தது. என்றாலும் அவளிடம் கொண்டிருந்த கவர்ச்சியை என்னால் விட முடியவில்லை. அவள் உடல் என்னை அழைத்தது; ஆனால் என் உள்ளம் செயல்பட மறுத்தது. அந்த மென்மையை நாடியது என் உள்ளம். அந்த மென்மையைப் பற்றி இப்போது நினைத்துப் பார்க்கிறேன். ஆபீஸ் நிகழ்ச்சிகள் என்னுள் நிழலாடின. 'உஷா அவள் தான் அந்த மென்மையின் இருப்பிடமாக விளங்கினாள். ஆபீஸில் அவள் என்னிடம் 'பைலை நீட்டுவாள். அவள் ஏதோ சொல்லத் தொடங்குவாள். நான் அவளையே கவனிப்பேன். என் நெஞ்சு எதையோ தேடும். அவள் உள்ளத்தில் நான் ஒன்றிவிட நினைப்பேன். நானும் அவளும் ஒன்று ஆகிவிடக் கூடாதா என்று எண்ணுவேன்; ஏங்குவேன். அதை வாய் விட்டுச் சொல்ல மாட்டேன். அதைத்தான் அவள் ஸ்பரிச உணர்வில் வெளிப்படுத்துவேன். அவளும் அதைப் புரிந்து கொள்வாள்; ஆனால் தெரிந்து கொள்ளமாட்டாள். அது நியாயமான உணர்ச்சிதான். அவள் பேரழகி அல்ல. இளையவள்; இனியவள். "உள்ளம் கவரத்தக்க எடுப்பான தோற்றம்; இனிமையான பேச்சு, நளினமான நடை, சாயல்" என்று எங்கோ படித்து இருக்கிறேன். அதை அவளிடம் கண்டேன். இப்படி எல்லாம் எண்ணுவேன். நெற்றிக்கு அவ்வளவு அழகு இருக்க வேண்டுமா? பெண்ணின் அழகே நெற்றியில்தான் இருக்கிறது என்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/57&oldid=772956" இலிருந்து மீள்விக்கப்பட்டது