பக்கம்:நனவோட்டங்கள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 : ரா. சீனிவாசன் அவள் எனக்கு விளக்கினாள். அவள் ஏன் தலைவலி என்று அன்று சொல்ல வேண்டும். என்னையும் அறியாமல் அவள் நெற்றியைத் தொட்டு அவளுக்கு ஆறுதல் காட்டினேன். "சுரம் இல்லை" என்றேன். "இப்பொழுது இல்லை" என்றாள். "ஏன் நீ அதிகமாகச் சிரிக்க மாட்டாயா?" என்று கேட்டேன். "சிரிக்க முடியவில்லை" என்றாள். அவள் நெஞ்சில் ஏதோ ஒரு சுமை இருந்தது. அதை எடுத்து வைக்க முடியவில்லை. அவள் சொல்கிறாள். 'சிரிக்க முயல்கிறேன் முடியவில்லை. எதை நினைத்துச் சிரிப்பது என்று தெரியவில்லை." "ஏன், நீ அழகாக இருக்கிறாய், அதற்காகச் சிரிக்க லாமே" என்றேன். அவளுக்கு விளங்கவில்லை. சிரிப்பதற்குத் தன்னிடம் எதாவது இருக்கவேண்டும் என்கிறாயே அழகு இருக்கிறது அதை வைத்துக் கொண்டு சிரிக்கலாமே என்று கூறினேன். அவளைப் புகழ்வதற்கு ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டேன். "சார் இதில் கையெழுத்துப் போடுங்கள்" என்று நீட்டினாள். கையெழுத்துப் போடத் தொடங்கினேன். என் கைகள் நனைந்தன. அந்தக் கறுப்பு மை நனைந்தது. அது அந்த ஏட்டை நனைத்துவிட்டது. அது அவள் சோகத்தைச் சித்திரித்துக் காட்டியது. ஒரு சொட்டுக் கண்ணிருக்கு இவ்வளவு ஆற்றல் இருந்தது என்பதை அப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன். விழும்பொழுது சூடாக இருந்தது; பிறகு தானாகக் குளிர்ந்து விட்டது; அவள் முகத்தைப் பார்த்தேன்; சிரித்தாள்; அழுவாள் என்று எதிர்பார்த்தேன். கண்ணிரைக் கொட்டி விட்டதால் அவள் நெஞ்சு லேசாக மாறியது. சிரித்தாள்; என்னால் சிரிக்க முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/58&oldid=772957" இலிருந்து மீள்விக்கப்பட்டது