பக்கம்:நனவோட்டங்கள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 57 "புரியவில்லையே” என்றேன். "என் எழுத்து அப்படித்தான்" என்றாள். "அதற்குமேல் அவளிடம் பேச விரும்பவில்லை. அவள் பேசத் தொடங்கினாள். "நீங்கள் ஏன் அந்த வேலைக்காரியை விரும்பு கிறீர்கள்?" என்று கேட்டாள். "அவள் இந்த நாட்டுக் குடிமகள்." "நல்ல காலம், அவளை இந்த நாட்டு அரசி என்று சொல்லவில்லையே!” "அப்படி நம் நாட்டுக் கவிஞர் ஒருவர் சொல்லி இருக்கிறார். எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்று. அப்படியானால் அவள் அரசிதானே.” "அதை நான் ஏற்கவில்லை. அவர் எல்லோருக்கும் சம உரிமை உண்டு என்ற கருத்தில் சொல்லி இருக்கிறார்." "நானும் அவளுக்குச் சம உரிமை தரப்போகிறேன். அவளை என் இல்லத்து அரசியாக்க்க விரும்புகிறேன்." என்றேன் நான். "உங்கள் மூளை கெட்டுவிட்டது” என்றாள். "அப்படித்தான் நானும் நினைக்கிறேன்" என்றேன். "அவள் வேலைக்காரி' "அது பெரிது அல்ல; நீ கள்ளோ காவியமோ படித்து இருக்கிறாயா?" "அவள் உங்களுக்குக் கள்ளாக இருக்கிறாள்." "அவளைக் காவியமாக்க முடியாதா?” "கள்ளைக் காவியமாக்க முடியாது; காவியத்தைக் கள்ளாக்க முடியாது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/59&oldid=772958" இலிருந்து மீள்விக்கப்பட்டது