பக்கம்:நனவோட்டங்கள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ரா. சீனிவாசன் இந்தச் சொற்கள் என் நினைவுக்கு வந்தன. நான் இப்பொழுது சந்திப்பது பேசுவது அவள் குறிப்பிட்ட கள்ளோடுதான். அது என்னை மயக்குகிறது. ஆனால் அதிலேயே நான் ஆழ்ந்து விடுவேனா? காவியம் என்னை இழுத்து வந்தது. காவியத்தைக் கற்கவில்லை என்றால் நான் சரி என்று சொல்லிவிட்டி ருப்பேன். காவியங்கள் மனிதனை எவ்வளவு தூரம் தவறு செய்யாமல் தடுக்கின்றன என்பதை என்னால் உணர முடிகின்றது. உஷா எனக்குக் காவியமாக விளங்கினாள். அதற்குள் ஒவியர் அங்குவந்து சேர்ந்தார். அவள் என்னைக் கவனிக்க வில்லை. பழங்களைக் கவனித்தாள்; அவற்றை அடுக்கி வைத்தாள். அந்தப் பழங்களில் அவள் எதிர்காலத்தைக் கண்டாள். நான் என் எதிர்காலம் அங்கு இல்லை என்பதை உணர்ந்தேன். ஒவியர் மறுபடியும் படம் எழுத உட்கார்ந்தார். கையில் வெள்ளைச் சாக்கட்டி இருந்தது. இன்னும் கலர் சாக்கட்டிகளும் இருந்தன. வினாயகர் வடிவம் அந்த ஒவியத்தில் எழுந்தது. "என்ன அந்தப்படத்தில் ஈடுபாடு" என்று கேட்டேன். "இவர்தான் அந்தக் குடும்பத்து மூத்த பிள்ளை. அவர் கல்யாணமே செய்துகொள்ளவில்லை" என்றார். நானும் என் அம்மாவிற்கு ஒரே பிள்ளை. இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்ற நினைவு வந்தது. "அவருக்குக் கல்யாணமே ஆகவில்லை; ஏன் தெரியுமா?" என்று கேட்டார். "தெரியாது. அவரைப் பார்த்து எந்தப் பெண்ணும் கல்யாணம் செய்துகொள்ளமாட்டாள்" என்று யதார்த்த மாகச் சொன்னேன். அதை அவர் எதிர்பார்க்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/60&oldid=772960" இலிருந்து மீள்விக்கப்பட்டது