பக்கம்:நனவோட்டங்கள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 59 "அம்மாவைப்போல் அழகியை எதிர்பார்த்தார்; அது கிடைக்கவில்லை.” - "அதனால் அவர் கடைச்சந்திக்கு வந்துவிட்டார். கோயில் குளத்தங்கரைக்கு வந்துவிட்டார். அரசமரத் தடியில் உட்கார்ந்துவிட்டார் பாவம் பரிதாபமான கதை தான் என்றார்." "அப்புறம் 2” "அவருக்கு வயதாகிவிட்டது. கல்யாணத்தையே மறந்து விட்டார்." - "உங்களுக்குக் கல்யாணமே ஆகவில்லையா?” 'இதுதான் என் கதையும். நான் எனக்குப் பிடித்த வளைத் தேடித் தேடி அலுத்துவிட்டேன். அதற்கப்புறம் ஓவியம்தான் துணையாகிவிட்டது” என்று முடித்தார். "இங்கே வருகிறவர்கள் உங்கள் படத்தில் எதை அதிகமாக ரசிக்கிறார்கள்.” "ரசிக்கிறார்கள், இல்லை மதிப்புத் தருகிறார்கள் என்று சொல்லுங்கள்-ரசனை முக்கியமல்ல. விஷயம்தான் முக்கியம்.” "வெங்கடேசப் பெருமாள் தான். அந்தப் படம் போடுகிற நாளில் மட்டும் ஒர் உண்டியை வைப்பேன். அதில் நிறைய காசு விழும்." "உங்களுக்குத்தான் பென்ஷன் வருகிறதே!” "இது பொதுத் தொண்டுக்கு” "இதிலிருந்துதான் கண்ணம்மாவிற்கு வியாபாரம் செய்ய மூலதனம் தரமுடிந்தது” என்று முடித்தார். அப்பொழுதுதான் அவள் பெயர் கண்ணம்மா என்பதைத் தெரிந்துகொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/61&oldid=772961" இலிருந்து மீள்விக்கப்பட்டது