பக்கம்:நனவோட்டங்கள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 ) ரா. சீனிவாசன் "கண்ணம்மா என் காதலி' எங்கேயோ படித்த நினைவு வந்தது. "நம் சொத்தத்துக்கு என்றும் சம்பாதிக்கவேண்டும். பிறருக்காகவும் சம்பாதிக்கவேண்டும், இதைத்தான் ஒவ்வொருவரும் செய்கிறார்கள்." "எல்லோரும் அப்படிச் செய்வது இல்லையே. தன் குடும்பம் வரைதான் பார்த்துக் கொள்கிறார்கள்.” "அதுதான் உண்மை. அவர்கள் ஒரு வரையறை செய்து கொள்கிறார்கள். குடும்பம் என்பதிலே அவனும் இருக்கிறான், மற்றவர்களும் இருக்கிறார்கள். மற்றவர்களுக் காகத்தான் அவனும் உழைக்கிறான். ஒவ்வொரு குடும்பமும் தன்னைச் சரிப்படுத்திக் கொண்டால் போதும். அதைத் தான் இல்லறம் என்று சொல்கிறார்கள்." அவரிடம் பேசுவதிலே எனக்குச் சுவை ஏற்பட வில்லை. மறுபடியும் அங்கு இருந்தாலும் அவர் திருக்குறளை ஒப்பிக்க ஆரம்பித்துவிடுவார் என்று நினைத்தேன். அவர் விடவில்லை. மேலும் பேசத் தொடங்கினார். 'எனக்கு அந்தக் குடும்பம் இல்லை. என்னால் இயன்றதை மற்றவருக்குச் செய்யத்தான் இந்த ஒவியத்தைப் பயன்படுத்தகிறேன்” என்றார். "இந்த பஸ் ஸ்டாண்டில்தான் இவளைச் சந்தித்தேன். நான் இல்லாவிட்டால் இந்தக் குழந்தைகளைக் காட்டி அவள் பிச்சை எடுத்திருப்பாள்; அல்லது தன்னைக் காட்டி தன்னையே விற்றிருப்பாள். அவளைக் காப்பதை நான் ஒரு கடமையாக எடுத்துக் கொண்டிருக்கிறேன்.” நா. காமராசனின் கறுப்பு மலர்களைப் படித்திருக் கிறேன். ஆடை வாங்குவதற்காக மானத்தைத் துறக்கும் விலைமாதர்களையும், ஒதுக்கப்பட்ட ஏழைக் குடிமக்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/62&oldid=772962" இலிருந்து மீள்விக்கப்பட்டது