பக்கம்:நனவோட்டங்கள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 61 யம், மக்களின் நண்பனாக விளங்கும் தபால்காரர்களையும், நீதிக்கு முன்னால் அநீதி இழைக்கப்படும் குற்றவாளிகளை யும் காட்டிய அவர், இந்த ஒவியரைப்பற்றியும் எழுதி யிருக்கலாமே என்று நினைத்தேன். அவர் கண்ணுக்கு எங்கே படப்போகிறார். அத்தியூத்தாற்போல அமைதி யாகத் தொண்டு செய்யும் இந்த மனிதரை அவர் கண்டிருக்க முடியாது. அவரைப்பற்றி நான் எழுதுவதற்கு வாய்ப்புத் தந்தார். அவரிடம் எனக்குத் தனி ஈர்ப்பு ஏற்பட்டது. அப்படியே அவரோடு பழகினால் நானும் அந்த ஒவியராகவும் முடியும் என்று நினைக்கிறேன். காலமெல்லாம் பிறர் கண்ணிரைத் துடைக்கும் பணியில் ஈடுபட்டால் அதுவே போதும். இந்தக் குடும்ப வாழ்க்கையில் காணும் இன்பத்தைப் பொது வாழ்க்கையில் காணலாமே என்ற எண்ணம் தோன்றும். அப்போது காமராசர் என் நினைவுக்கு வந்தார். கவிஞர் காமராசர் அல்ல; தலைவர் காமராசரைச் சொல்கிறேன். அவர் வாழ்க்கைத் தொண்டுக்காகவே பயன்பட்டது. மணக்க வில்லை; ஆனால் அவர் வாழ்வு மலர்ச்சி பெற்றது. மணம் இல்லாவிட்டாலும் பூவை மலரென்றுதானே சொல் கிறோம். அதுவும் அழகாக விளங்குவதால், 'அரசாங்கம் மகளிருக்கு விடுதிகட்டித்தந்து இருக்கிறார்களே' என்றேன். "யாருக்கு? கெட்டுவிட்டவர்களுக்குத்தான போலீஸ் காரர்கள் அவர்களுக்கு விபச்சாரப் பட்டமளித்து நீதி மன்றத்தில் நிறுத்தி வைத்துப் பட்டமளிப்பு விழாவும் நடத்திய பிறகுதான் அவர்களுக்குக் காப்பு அல்ல காவல் தருகிறது." "குழந்தைகளை அனாதை ஆசிரமத்தில்." "எங்கே கட்டி வைத்திருக்கிறீர்கள்? அந்தச் சொல்லைக் கேட்பதற்குக் கடுமையாக இருக்கிறதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/63&oldid=772963" இலிருந்து மீள்விக்கப்பட்டது