பக்கம்:நனவோட்டங்கள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 & ரா. சீனிவாசன் 'குழந்தைகள் விடுதி என்று பெயர் வைத்தால் நலமாக இருக்கும். அவர்களுக்கு அனாதைகள் என்ற பெயரைச் சூட்டும்பொழுது அவர்கள் நெஞ்சில் சூனியம் நிறைந்து விடுகிறது. தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் என்று சொல்லிக்கொள்ள வேண்டும். அன்பு என்பதைக் கற்றுக் கொள்ளத் தாய் அவசியம்; தாய் ஒருத்தியால்தான் அன்பைச் சொல்லிக் கொடுக்க முடியும். அதை இந்தப் பொது விடுதிகளில் காணமுடியாது. ஒன்று நாம் அமெரிக்கர்களாக இருக்க விரும்புகிறோம். இல்லா விட்டால் ருசியாவைக் காட்டுகிறோம். இந்தியாவில் வாழ நாம் நினைப்பதில்லை.” "விளங்கவில்லை." "தாயைவிட்டுக் குழந்தைகள்ைப் பிரிக்கக்கூடாது. அதே சமயத்தில் குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும்." "வளர்க்கின்றவர்கள் என்னுடைய குழந்தைகள் என்று சொல்லிக்கொள்ள முடியாதே." "குழந்தையில்லாதவர்களுக்கல்ல நான் சொல்வது. குழந்தை இருக்கிறவர்களே பிற குழந்தைகளை வளர்க்க வேண்டும். மனிதனுக்கு இரண்டு கடமைகள் இருக்கின்றன; சொந்தம்; பந்தம். இதைத்தான் சொந்த பந்தம் என்று சொல்கிறோம். பந்தம் என்பது நாமே சிலர்மீது பற்றுக் காட்டி உறவினர்களாக ஏற்றுக்கொள்வது. எனக்குச் சொந்தம் யாரும் இல்லை. அதனால்தான் அவர்களைப் பந்தமாக ஏற்றுக்கொண்டேன்" என்றார். "ஏழைகளை ஒதுக்கக் கூடாது. அவர்களை நம்மோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதுதான் இந்தியப் பண்பாடு. புதிதாக உருவாக்கும் பண்பாடு." "அப்படி என்றால்?" " ; , "ருசியாவில் ஏழைபணக்காரர் என்ற பாகுபாடு இல்லை என்று சம உரிமை, பொது உடைமை, சம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/64&oldid=772964" இலிருந்து மீள்விக்கப்பட்டது