பக்கம்:நனவோட்டங்கள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ரா. சீனிவாசன் பதவிக்கு வராமல் மக்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” என்று சொன்னார். "சம உடைமைக்கும் பொது உடைமைக்கும் உள்ள வித்தியாசம் அதிகம் இல்லையே!” "இருக்கிறது. தனிப்பட்டவர் எந்தச் சொத்தும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது பொது உடைமை. எலலோரும் சமமான சொத்துக்கள் வைத்துக் கொள்ளலாம் என்பது சம உடைமை" என்றார். "நான் எனக்காக உழைத்துச் சம்பளம் வாங்கினேன். அது தனி உடமை; அப்புறம் பிறருக்காக என்று சம்பாதித்துச் சேர்க்கிறேனே அது நான் சமுதாயத்துக்குச் செய்யும் பணி. அதில் வரும் வருவாயைப் பிறருக்கு உடைமையாக்கு கிறேன். இது ஒரு வழி. எல்லாவற்றையும் நானே சம்பாதிக்க நினைக்காமல் மற்றவர்களுக்கும் வாய்ப்புத் தருவதும் இதுவே தான். அவர்களையும் சம உடைமை பெறும்படி செய்கிறேன் என்பது அதற்குப் பொருள். இதுதான் 'காந்தீயம்' என்றார். நான் இதுவரை காந்தீயம் என்பதற்குத் தவறான கருத்துக் கொண்டிருந்தேன். உண்மை பேசுவது; வன்முறையை விட்டு நீங்குவது என்று. ஒவியர் தந்த விளக்கம் என்னைச் சிந்தனையில் ஆழ்த்தியது. "காந்தியைப் பின்பற்றுவது என்றால் உண்மை பேசுவது; பலாத்கார மில்லாமல் நடந்து கொள்வது என்று நினைத்தேன்" என்று கூறினேன். "இது முறைகள்; முடிவுகள் அல்ல; காந்தியின் பாதையைத் தான் வற்புறுத்துகிறார்களே தவிர, அவர் லட்சியத்தை யாரும் வற்புறுத்துவது இல்லை. மக்கள் கொதித்து எழாமல் இருக்கக் காந்தியை இந்த வகையில் பயன்படுத்துகிறார்கள்” என்று சொன்னார். "சம உடைமையை வற்புறுத்தினார் என்று எப்படிக் கூற முடியும்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/66&oldid=772966" இலிருந்து மீள்விக்கப்பட்டது