பக்கம்:நனவோட்டங்கள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 65 "அவர் தனக்குத் தேவையான துணிமணிகளை மட்டும் வைத்திருந்தார். தன் உழைப்பால் வாழ்ந்தார். பிறரிடம் பெறும் பொதுப்பணத்தை மற்றவர்க்குப் பயன்படுத்தினார். மிகக் குறைந்த செலவுள்ள உணவு. ஆடை இந்த நாட்டுச் சாதாரண மனிதரின் ஆடை, அதிலும் அவர் சமுதாயத்தைச் சுரண்டவில்லை; தன் மக்களுக்கு என்று எந்தச் சொத்தையும் ஈட்டவில்லை; எழுதி வைக்கவில்லை." அதனால்தான் அவரை தேசபிதா என்று சொல்லு கின்றோம் என்று எண்ணத் தொடங்கினேன். எனக்கும் அவரைப் போல் ஏன் தொண்டு செய்யக் கூடாது? என்ற எண்ணம் உண்டாயிற்று. அவர் மேலும் சொன்னார். 'பல பேருக்குத் தெரியாது. அவரவர் பிள்ளைகள் தான் எதிர்காலத்தில் காப்பாற்றப் போகிறார்கள் என்று நினைக்கிறார்கள். அவர்கள் சொத்துக்கு வாரிசாக அமைகிறார்களே தவிர வேறு எந்தக் கைம்மாறும் செய்வதில்லை." "அவரவர்கள் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டியது கடமை; அதுக்கப்புறம் இந்தச் சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் தம்மாலானதைச் செய்ய வேண்டும். இதைத் தான் நான் வற்புறுத்துகிறேன். அதுக்குத்தான் இந்த உண்டி. கண்ணம்மா என்னிடம் வந்த பிறகு தான் இந்த உண்டியை வைத்திருக்கிறேன். அதற்கு முன்னால் நான் யாரிடமும் பணம் கை நீட்டி வாங்கியதில்லை. முன்னர் நீங்கள் தந்த போதும் மறுத்துவிட்டேன்.” "உண்டி எதற்காக? கேட்டு வாங்கலாமே.” "இதில்தான் ஒரு சிறந்த தத்துவம் இருக்கிறது. கொடுக்கிறது யார் கொடுக்கிறது எது என்று தெரியக் கூடாது. இதில் வற்புறுத்தல் கிடையாது. விளம்பரப் பிரியர்களுக்கு இது உதவாது. நிஷ்காமியமாக இப்பொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/67&oldid=772967" இலிருந்து மீள்விக்கப்பட்டது