பக்கம்:நனவோட்டங்கள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 ல் ரா. சீனிவாசன் ளைத் தரவேண்டும். அதுக்காகத்தான் இந்த முறையைக் கையாளுகிறார்கள்” என்று விளக்கம் தந்தார். திருப்பதி உண்டி என் கவனத்துக்கு வந்தது. அதில் தாராளமாக வாரி வழங்கும் நல்ல உள்ளங்களைப் பாராட்டினேன். விளம்பரப்படுத்தித் தரும் கொடை யாளிகள் இங்கே அடக்கமாகத் தன் கடமையைச் செய்வது கண்டு வியக்க முடிந்தது. அரசாங்கத்தை வரி கொடாமல் ஏமாற்றுபவர்களும், விளம்பரத்திற்காக நன்கொடை தருகிற வர்களும் மனிதத் தன்மையோடு நடந்து கொள்ளும் இன் கொடையாக இது விளங்குகிறது. அதைப் பார்த்துத் தான் அவர் இந்த உண்டி வைத்தார் என்பதைத் தெரிந்து கொண்டேன். என் மனம் சாதாரண காதல் விஷயங்களைக் கடந்து எங்கோ சென்றது. புரட்சி, காதல் என்று நினைத்து வந்த எண்ணம் சம உடைமையை'ச் சுற்றிச் சென்றது. புரட்சிக்காகக் கண்ணம்மாவை மணக்க விரும்பினேன். காதலுக்காக உஷா கிடைத்தாள். சமஉடைமை லட்சியத்தைச் செயற்படுத்த ஓவியர் வழிகாட்டியாக அமைநதாா. புரட்சி, காதல், சமஉடைமை மூன்றும் அர்த்தமுள்ள சொற்களாகக் காணப்பட்டன. அலட்சியம் என்னைவிட்டு நீங்க ஆரம்பித்தது, வாழ்க்கையில் லட்சியங்கள் மெல்ல இடம் பெற்றன. 6 இதைப்போலப் பல நாட்கள் ஒவியரை உந்து நிலையத்தில் கண்டு பேசி இருக்கிறேன். அது மிகவும் சுருசுருப்பான இட்மாகவும் காணப்பட்டது. பஸ்ஸில் பொதுவாகப் பயணம் செய்கிறவர்கள் நன்றாகவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/68&oldid=772968" இலிருந்து மீள்விக்கப்பட்டது