பக்கம்:நனவோட்டங்கள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 67 உடுத்துகிறார்கள். சுருசுருப்பாகவே இருக்கிறார்கள். ஏதோ ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கியே செல்கிறார்கள். ஆனால் என்னைப் போல எந்த வேலையும் இல்லாதவர் களுக்கு அது ஒரு பொழுதுபோக்கும் இடமாகவும் இருந்தது. மற்றும் முன் குறிப்பிட்ட புரட்சிதான் அங்கு இழுத்துச் சென்றது. அங்குச் சென்ற பிறகுதான் மற்றொரு அனுபவமும் ஏற்பட்டது. ஒய்வு பெற்ற ஒவியர் ஒய்வில்லாமல் உழைப்பதைக் காண முடிந்தது. அரிய செய்திகளை மிகவும் எளிமையாக விளக்கினார். படித்தவர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் தாம் கற்ற கல்வியிலும் துறையிலுமே சிறந்த வர்களாகக் காணப்படுகின்றனர். அவர்கள் சொல்லாத செய்திகளை இவர் சொல்வதைக் கண்டு வியப்பும் ஆர்வமும் பெருகின. லட்சியம் உடைய மாந்தர்க்கு அறிவும் தெளிவு பெறுகிறது என்பது அவரைப் பார்த்துப் பழகிய பிறகுதான் தெரிந்தது. எப்பொழுதும் மனிதர்கள் கஷ்டங்களை நினைத்துக் கொண்டு அழுவது இல்லை. அழுகை தனிமையில் ஏற்படலாம்; பிறரோடு பழகும்பொழுது வாழ்க்கைச் சுமை குறைகிறது என்பதை உஷாவிடம் காண முடிந்தது. அவள் இப்பொழுது என்னிடம் தாராளமாகப் பழகினாள்; உணர்வு நிலை கடந்து அறிவு நிலையில் பழகினாள். வழக்கமாக அவள் ஒரு தொடர்கதை பையைத் தோளில் மாட்டிக் கொண்டாள். ஆனால் அவள் அந்தக் கதாநாயகி போல பையில் லிப்ஸ்டிக்கும் கண்ணாடியும் வைத்திருக்கவில்லை. அதைப் பற்றி அவள் கவலைப்பட்ட தாகத் தெரியவில்லை. "ஏன் நீங்கள் பஸ்ஸில் வருகிறீர்களா?" என்று உஷா ராணி கேட்டாள். அதுதான் அவள் முழுப் பெயர். இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/69&oldid=772969" இலிருந்து மீள்விக்கப்பட்டது