பக்கம்:நனவோட்டங்கள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"நன வோட்டங்கள்" 1. நான் அன்று திரைப்படம் பார்க்கப் போயிருந்தேன். எனக்கு எப்பொழுதும் கொஞ்சம் அகம்பாவம்தான். எது உயர் வகுப்பு என்று சுற்றுமுற்றும் பார்த்தேன். 2-90 அந்தத் தியேட்டருக்கு அது உயர்வகுப்பு. ஏன் 1-90க்குப் போகக் கூடாது. மேலே பால்கனி 2-90. கீழே தரை மட்டம் 1-90. அங்கேயும் நாற்காலிதான் இங்கேயும் நாற்காலிதான். அவள் ஏன் அந்தப் படத்தைப் பார்க்கச் சொன்னாள். கட்டாயம் பார்க்க வேண்டும் என்று சொன்னாள். "அதில் என் வாழ்க்கை அப்படியே சித்திரமாக்கப்பட்டிருக்கிறது”. என்று சொன்னாள். அதை நம்ப முடியவில்லை. படம் என்பது வெறும் கதை. அதில் எப்படி அவள் வாழ்க்கை இடம் பெறும்? ஒவ்வொருவரும் அப்படித்தான் நினைக்கிறோம். வாழ்க்கையின் பிரதிபலிப்புதான் கதை. இல்லாவிட்டால் ஏன் இத்தனை பேர் போய்ப் பார்க்கிறார்கள். 'சில நேரங்களில் சில மனிதர்கள் அற்புதமான கதை. அவள் மாமா வக்கீல், அவர் தன் கைவரிசையைக் காட்டுகிறார். வயசானவர்களுக்கு இந்த மாதிரி ஆசைகள் வருமா? லட்சுமியை அவர் காதலிக்கிறார். அது காதலா? இல்லை. கவர்ச்சி, இளமை அவரை அழைக்கிறது; அவ்வளவுதான். அவர் உழைப்பை எல்லாம் வாங்கிக் கொண்டாள். தூக்கி எறிந்து விட்டாள். பாவம் ஆனால் மற்றவர்கள் சிரிக்கத்தக்க வாழ்க்கை. யாரும் அவர் நடத்தை நியாயம் என்று சொல்லமாட்டார்கள். ஆனால் இதுமாதிரி நடக்காமல் இருக்கா? ஆசை யாரை விட்டது. லட்சுமியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/7&oldid=772970" இலிருந்து மீள்விக்கப்பட்டது