பக்கம்:நனவோட்டங்கள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ரா. சீனிவாசன் வரையும் சொல்ல மறந்து விட்டேன். அவள் பெயர் உஷாவாக இருந்தால் என்ன? உஷாராணியாக் இருந்தால் என்ன? அவள் ஆபீஸுக்கு உள்ளே உஷாராணி, நான் இரகசியமாக என் மனத்தில் நினைத்துக்கொள்வது ராணி', அவளை வெளியே கூப்பிடுவது 'உஷா. இந்த மூன்று வடிவங்களில் அவள் எனக்குப் பழக்கமாக இருந்தாள். வெளியே தேர்தல் கிறுக்கல்கள். உஷார் வா. ரா.” என்று எழுதியிருந்தது. அதைப் பார்த்து எனக்குள் சிரித்துக் கொண்டேன். அது எந்தக் கட்சிக்காரர்கள் எழுதிய கிறுக்கல் என்பது பார்த்தாலே தெரிகிறது. அந்தச் சுவர் கிறுக்கலை அவளுக்குக் காட்டினேன். அவளும் என்னோடு சிரித்தாள். என்னிடம் நீங்கள் உஷாராக இருக்கவேண்டும் என்பதைத்தான் அது காட்டுகிறது என்றாள். "பெண்களிடத்திலேயே கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்” என்று தத்துவம் பேசினேன். "இந்த மாதிரிச் சொல் விளையாட்டு நன்றாகத்தான் இருக்கிறது” என்று குறிப்பிட்டுவிட்டு நடந்தாள். நானும் அவளைப் பின் தொடர்ந்தேன். சிறிது நேரம் பொறுத்து நான் முன்னே போனேன். அவள் என்னைப் பின் தொடர்ந்தாள். - ஆபீஸில்தான் எங்களுக்குள் உயர்வு தாழ்வு காட்டிக் கொண்டோம். வெளியே நாங்கள் நண்பர்கள் போலவே பழகும் உரிமையை எடுத்துக் கொண்டோம். சம உரிமை, சம அந்தஸ்து, சம உடைமை இந்த மூன்று சொற்களில் சமஉடைமை, சம அந்தஸ்து இரண்டும் நம்மால் பிறருக்குக் கொடுக்க முடியாவிட்டாலும் சமஉரிமைய்ாவது தர வேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கை இருக்கிறது. ஒவியருடன் பழகிய பிறகும் சம அந்தஸ்தும் முதலில் கொடுத்துப் பழகினால்தான் சமதர்மப் பாதையை நோக்கிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/70&oldid=772971" இலிருந்து மீள்விக்கப்பட்டது