பக்கம்:நனவோட்டங்கள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 69 செல்ல முடியும் என்று எண்ணத் தொடங்கினேன். 'சமஉடைமை இந்த அரசியல் சூழலில் வரும் என்ற நம்பிக்கை எழவில்லை. அடிப்படைச் சட்டங்கள் மாற்றப் பட்டால்தான் இந்தச் சமநிலை உருவாகும் என்பதை என்னால் சிந்தித்துப் பார்க்க முடிந்தது. "ஏன் நீங்கள்கூட பஸ்ஸில் போகிறீர்களா?” என்று கேட்டாள். "ஏன் நடந்து போகச் சொல்கிறாயா?” "இல்லை ஏதாவது.” "கார் வாங்கச் சொல்கிறாயா?" "ஸ்கூட்டராவது வாங்கலாமே." "யோசித்துக் கொண்டு இருக்கிறேன். பின் இடம் காலியாக இருந்தால் ஸ்கூட்டருக்கே மரியாதை இல்லாமல் போய்விடும்” என்றேன். "அதில் குடும்பத்தோடு அதாவது குழந்தைகளோடு செல்லும் பொழுது அதன் மதிப்புத் தாழ்ந்து விடுகிறது” என்றாள். “ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டு விழாமல் செல்வது சர்க்கஸ் விளையாட்டுப்போல் காணப்படுகிறது" என்றேன். "அந்த நிலையில் நிச்சயம் கார் வாங்கிவிடுவேன்"என்று மேலும் முடித்தேன். "தலையில் ஹெல்மெட்டுப் போட வேண்டும்." "வழுக்குத் தலைவரும் காலத்தில் ரொம்ப அவசியம்" என்றேன். இந்த வயசிலே அதை மாட்டிக்கொள்ளப் பிடிப்பது இல்லை." "என்ன செய்வது. பின்னாலே மூளை சிதறுவதை விடத் தற்காப்புச் செய்து கொள்வது நல்லது தானே.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/71&oldid=772972" இலிருந்து மீள்விக்கப்பட்டது