பக்கம்:நனவோட்டங்கள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ( ரா. சீனிவாசன் "இப்பொழுது சிதறவில்லை என்று சொல்லு கிறாயா?" "புத்தி சிதறிவிட்டது. மூளை சிதறவில்லை” என்றாள். அவள் யாரைக் குறிப்பிடுகிறாள் என்பதைத் தெரிந்து கொண்டேன். "அவள் கணவனை இழந்தவள்.” "அதற்காக உங்களை இழக்க வேண்டுமா?" அதற்கு அர்த்தம் தெரியவில்லை. அவள் என்ன சொல்கிறாள் என்பதை முதலில் தெரிந்துகொள்ள முடிய வில்லை. என்னை நான் இழப்பதைக் குறிப்பிடுகிறாளா? அவள் என்னை இழப்பதைக் குறிப்பிடுகிறாளா? என்பது விளங்கவில்லை. இங்கே சொல் அவளிடத்தில் விளையாடியது. "சித்திரப்பாவை' படித்திருக்கிறாயா' என்று கேட்டேன். "அதன் ஒவ்வொரு பாத்திரத்திலும் ஒன்றிப்போய் இருக்கிறேன். இப்பொழுது கதை சொல்லட்டுமா?" என்றாள். "அப்படியானால் நடந்து கொண்டே பேசலாம். வீட்டுக்குப் போகச் சரியாக இருக்கும்" என்றேன். கதைத் தொடக்கத்தில் ஒர் ஏழை ஒருத்தியை அந்த இளைஞன் வரைகிறான். அவன் பார்த்த உருவம் வேறு: வரைந்த உருவம் வேறு. அவள் சென்னையில் எவ்வாறு சீரழிந்து நிற்பாள் என்று கற்பனை செய்து எழுதினானே அது என்னை வியப்பில் ஆழ்த்தியது என்றேன். "அதுபோல, நீ தியானம் செய்யும் அவள், ஆகிவிடு வாள் என்று நினைக்கிறாயா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/72&oldid=772973" இலிருந்து மீள்விக்கப்பட்டது