பக்கம்:நனவோட்டங்கள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 71 "இல்லை. அந்த எழுத்தாளனின் கற்பனை ை வியக்கின்றேன்." "நீ குறிப்பிடும் அவள் அவளாக இருக்க வேண்டு மானால் அவள் அந்த நிலைக்குச் செல்லவிடக்கூடாது” என்றேன். "அதற்கு ஒவியர் இருக்கிறார். பார்த்துக் கொள்வார்" என்றாள். 'உனக்கு உணர்வே மங்கிவிட்டது என்று நினைக்கிறேன். வெறும் சோறு போட்டால் போதுமா?" "உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு இதுதான் அவசியம். அப்படித்தான் பலர் சொல்லக் கேட்டு இருக்கிறேன்." "இவை மனிதருக்கு அவசியமானவை. மனிதனை விலங்கு நிலையில் மதிப்பிடும் போது இவை போதும்." "நீங்கள் தான் அவளிடம் வாங்கிக் கட்டிக் கொண்டீர்களே.” "அவள் அப்படி நேருக்கு நேர் கேட்பாள் என்று எதிர்பார்க்கவில்லை." "சரி இப்பொழுது?" "இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஒவியரைக் கேட்டுத் தான் முடிவு செய்யவேண்டும். அவர் சொன்னால் நான் ஒப்புக் கொள்வேன்." - "அவர் அறிவாளி. அவசரப்பட்டு உங்களுக்கு அப்படிச் சொல்ல மாட்டார்." "ஏன் புரட்சி அவருக்குப் பிடிக்காதா?” "புரட்சிக்காகவே புரட்சி என்பதை அவர் ஒப்புக் கொள்ள மாட்டார். அவசியத்துக்காகத்தான் புரட்சி செய்ய ஒப்புக்கொள்வார்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/73&oldid=772974" இலிருந்து மீள்விக்கப்பட்டது