பக்கம்:நனவோட்டங்கள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 ரா. சீனிவாசன் "அவர் வயதானவர். அவருக்குப் புரட்சி பிடிக்காது. கலியாணம் ஆகாதவர் வாழ்க்கையில் எந்தச் சுக்த்தையும் காணாதவர்; வெறும் பொம்மைகளையே கண்டவர்; நிறத்திலேயே நின்றுவிட்டவர்." "அவர் தன் சொந்த ஆத்ம திருப்திக்காக இந்தத் தொண்டு செய்கிறார். அது ரொம்ப நாளைக்கு இருக்காது; அதைவிட வேறு ஒருவருக்கு அவசியமான உதவி செய்ய வேண்டி வந்தால் அவளைக் கைவிட்டு விடுவார்." "எப்படிச் சொல்கிறாய்?" "அவர் நிலையான கொள்கையாளராக இருந்தால் எப்பொழுதோ மணம் செய்து கொண்டிருப்பார். கல்யாணம் செய்து கொள்வதா வேண்டாமா; இவளா, அவளா, இந்தச் சலன புத்திதான் அவரை ஒரு நல்ல முடிவுக்கு வராமல் செய்துவிட்டது. பொம்மை எழுதுவது தொழில், அதுவே அவர் வாழ்வின் பிடிப்பாக அமைந்து விட்டது. அவ்வளவு நல்லதாகப் படவில்லை" என்றேன். "அது நடந்த காலம். இப்பொழுது அவர் தொண்டில் தான் அமைதி காண முடியும்." இது அவள் வினா. "நான் அதை ஒப்புக்கொள்ள முடியாது. அவள் பெண்; அழகாகவும் இருக்கிறாள். அவரை மட்டும் அவள் கவரமாட்டாள் என்று எப்படிச் சொல்ல முடியும். எதை அவர் இளமையில் அனுபவிக்க மறந்தாரோ அதை அவர் வெறும் உறவால் அடைய முயல்கிறார். பெண்மை மனிதருக்கு மிகவும் அவசியம். அந்த எண்ணம் தான் மனிதனை வாழத் துரண்டும்; அவர் அந்தப் பிடியிலிருந்து முற்றிலும் விலகிவிட்டார் என்று கூற முடியாது. அவர் குழந்தை இன்பத்தையும் கண்டவர் அல்ல. தன் சொந்த வாழ்வில் அடையாத ஒரு முழுமையைத் தன் தொண்டில் காண முயல்கிறார்' என்று அவளுக்கு விளக்கினேன். "அப்படி என்றால் அவளை."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/74&oldid=772975" இலிருந்து மீள்விக்கப்பட்டது