பக்கம்:நனவோட்டங்கள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 73 "அவர் ஒன்றும் செய்ய முடியாது. அவள் அவரை விட்டு விலகி விடுவாள். அவரிடம் அவள் பொருளாதார உரிமையை நாடுகிறாள். அது முதற்படி இரண்டாவது நிலையில்.” "உங்களை மணப்பாள்...” "நிச்சயமாக, எனக்கு அதில் நம்பிக்கை இருக்கிறது. அவள் எப்பொழுதும் எனக்காகக் காத்துக் கிடப்பாள். இல்லாவிட்டால் அவள் அவ்வளவு துணிவாகக் கேட்க மாட்டாள். சிந்தனை இல்லாமல் சொல் பிறவாது” என்றேன். "அப்பொழுது நீங்கள்..." கொஞ்சம் மரியாதை கலந்து பேசினாள். "எனக்கே உரிய சலனம்தான் என்னைச் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வராமல் செய்கிறது" என்றேன். அவள் மெல்லப் பேச்சை மாற்றினாள். 'அவளைப் பற்றிப் பேச அவள் விரும்பவில்லை. "அவர்கள்" படத்தைப் பார்த்தீர்களா?" என்றாள். அதற்குப் பிறகு மரியாதை யாகவே பேசத் தொடங்கினாள். "பார்த்தேன்." "அதில் எந்தப் பாத்திரம் பிடித்திருக்கிறது?” "இது என்ன நாவலா? பாத்திரம் பிடித்திருக்கிறது என்று கேட்பதற்கு.” "நாவலில் மட்டும் ஏன் அப்படிக் கேட்கிறார்கள்?" "அது மாதிரிக் கதை எழுதுகிறவர்கள் பழக்கி விட்டார்கள். பாத்திரங்களைப் படைப்பதே அவர்களின் லட்சியமாக இருந்து வருகிறது." "அது அவசியம் தானே.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/75&oldid=772976" இலிருந்து மீள்விக்கப்பட்டது