பக்கம்:நனவோட்டங்கள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 ல் ரா. சீனிவாசன் "சமூக உணர்வையும், வாழ்க்கைப் பிரச்சனைகளை யும் அலசிக் காட்டும்பொழுது பாத்திரங்களுக்கு முக்கிய இடம் கொடுக்க முடியாது.” "அவர்கள்” என்ற படமும் அப்படித்தானே." "வாழ்க்கைப் பிரச்சனை அது. குடும்பத்திற்காக உழைத்து, இயந்திரம்போல் வாழும் பெண்ணின் கதை 'அவள் ஒரு தொடர்கதை. கணவன் கொடுமையால் வாழ முடியாமல் தவிக்கும் பெண்ணின் கதை அவர்கள். "நான் ஒப்புக் கொள்ள முடியாது. பாத்திரப்படைப்பு இல்லாவிட்டால் எந்தச் சமூகப் பிரச்சனை நாவலும் சிறப்புப் பெறாது” என்றாள். அது அவள் ரசனை. "இதில் காட்டப்படும் பாத்திரத்துள் உனக்குப் பிடித்த பாத்திரம்." "அத்தை தான்.” அப்படி அவள் சொல்லும்பொழுது என் அம்மாவின் நினைவு என்னுள் ஒடியது. என் தாய்தான் மிக உயர்ந்தவள் என்ற நினைவு மேலும் வலுப்பெற்றது. "அதில் வெறுக்கத்தக்க பாத்திரம்?" "என் கணவனைப் போலவே நடிக்கும் அவன்தான் என்றாள். வாய் தவறி அந்த உவமையைச் சொல்லி விட்டாள். இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று காட்டியது தான் அந்தக் கதையின் சிறப்பு என்றாள். இந்தக் கதையின் விமர்சனம் எங்கள் நடைப் பயணத்துக்கு முடிவு செய்து விட்டது. இவ்வளவு விரைவாக நாங்கள் பிரிவோம் என்று எதிர்பார்க்கவில்லை. "என்னடா யோசனை பண்ணுகிறாய்?" அப்பொழுது தான் நான் வீட்டில் இருக்கும் உணர்வு ஏற்பட்டது. 'அவர்களில் வரும் அம்மா போல என் அம்மா காணப் பட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/76&oldid=772977" இலிருந்து மீள்விக்கப்பட்டது