பக்கம்:நனவோட்டங்கள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 75 உஷாவைப் பற்றிய சிந்தனையில் சுழன்று கொண்டிருந்தேன். "ஆபீஸ் விஷயம்' என்று அம்மாவை அனுப்பி விட்டேன். "அவர்கள்" படம் "உஷா" இரண்டும் என் சிந்தனை யில் இடம்பெற்றன. அவர்கள் என்ற படத்தின் கதை என்ன? அவள் ஓர் அழகி. அவனால் அவளை வைத்துக் கொண்டு வாழமுடியவில்லை. அவளை வெறுக்கிறான். அவள் எது செய்தாலும் பிடிக்கவில்லை. அவளை வாட்டுவதே அவன் தொழிலாகிறது. சிலரைத் துன்புறுத்தலே சிலருக்கு மனப் பழக்கமாகி விடுகிறது. அதிலே ஒரு சந்தோஷம். இதை ஆங்கிலத்தில் Sadism" என்கிறார்கள். தமிழில் சரியான வார்த்தை கிடைக்க வில்லை. துன்புறுத்தி மகிழ்தல்' என்றுதான் கூறமுடிகிறது. அழவைப்பதிலே அவனுக்குத் தனி இன்பம். அவள் வாழக் கூடாது. அவள் குழந்தைக்குத் தாயாகி விடுகிறாள். எப்படி? சில நேரங்களில் மனிதன் மிருகமாகி விடுகிறான். அதற்கு அவர்கள் தாய்மை ஓர் அடையாளம். அதற்குப் பிறகு மறுபடியும் அவன் மனிதனாகி விடுகிறான். அங்கே தான் தொல்லையே ஏற்படுகிறது. மிருக உணர்வே மேல் என்ற நினைப்புத் தோன்றுகிறது. மனிதனுக்கே உரிய கீழ்மை, சூழ்ச்சி, வெறுப்பு அத்தனையும் அவனிடம் குடி கொண்டு விடுகின்றன. இது திரைப்படக் கதை. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை அப்படம் உணர்த்தும் பொழுது ஆச்சரியப் பட வேண்டியுள்ளது. அந்தப் படத்தோடு அவள் வாழ்வு ஒற்றுமை பெற்று இருக்கிறது என்று சொன்னாள். அவள் கணவனால் ஒதுக்கப்பட்டவள்; வெறுக்கப்படுகிறாள் என்பதை உணர்ந்து கொண்டேன். அவன் ஒரு மனித மிருகமாகத்தான் இருக்க வேண்டும். பெண்ணின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/77&oldid=772978" இலிருந்து மீள்விக்கப்பட்டது