பக்கம்:நனவோட்டங்கள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 : ரா. சீனிவாசன் இதயத்தை உணராத பேயனாகத்தான் இருக்க வேண்டும். கட்டியவளைக் கலங்க வைத்த கயவனாகத்தான் இருக்க வேண்டும். அவன் என்னதான் நினைக்கிறான்? அவள் இப்படியே கருகிய மொட்டாகக் கசங்கி நசுங்கி நலிய வேண்டுமா? அவள் இதயம் சுக்கு நூறாக வெடித்து வேதனையில் சூழ வேண்டுமா? கொழுகொம்பு இல்லாத செடி இவ்வுலகில் வாழ முடியுமா? கற்பு என்னும் உன்னத லட்சியத்தைக் காக்கக் கணவன் துணை செய்ய வேண்டாமா? அவளுக்கு மனம் சஞ்சலிக்காதா? சலனங்கள் ஏற்பட்டால் அவள் நிலை என்ன ஆகும்? மறுபடியும் அவன் எப்படி அவளை வைத்துக்கொண்டு வாழ முடியும்? கறைபட்ட வாழ்க்கையை அவன்தானே ஏற்படுத்திக் கொடுக்கிறான்? ஏன் அவளை உதாசீனப் படுத்தினான். இந்த நாட்டில் மாமியாரின் கொடுமையால் வாழ முடியாமல் தவிக்கும் மங்கையர் பலர்; எவ்வளவோ பேர். இது சாதாரண நிகழ்ச்சி; நாளைக்கு என் தாயும் நிச்சயமாகத் தான் மாறப் போகிறாள். அவள் விரும்பித் தேடிக் கட்டி வைக்கும் மருமகள்தான் நாளை பகையாக மாறிவிடுகிறாள். அப்படி ஏதாவது கொடுமை ஏற்பட்டிருக்க வேண்டும். அவள் மாமியார் தான் பையனை மாற்றி இருக்க வேண்டும். அல்லது அவனே மனச்சிக்கல் உடையவனாக இருக்க வேண்டும். மேல் நாட்டில் என்னென்னமோ சிக்கல்களைக் கூறுகிறார்கள். தாழ்வு மனப்பான்மை' என்பது அவன் மனோவியாதியாக இருக்கலாம். "உன் கணவன் உன்னைவிட அழகாக இருப்பானா? இப்படி ஒருமுறை அதற்குப்பின் கேட்டிருக்கிறேன். "இல்ல்ை. அழகில்லாதவன் என்று கூறமுடியாது. அழகுக்காக அவனை எப்பொழுதும் மதித்தது இல்லை."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/78&oldid=772979" இலிருந்து மீள்விக்கப்பட்டது