பக்கம்:நனவோட்டங்கள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 77 "அப்படி என்றால்?” "கணவன்; அதற்காக மதித்தேன்.” இவள் பழங்காலத்துப் பெண்ணாகவே காணப் பட்டாள். "அவன் அழகாக இல்லை என்பதால் உனக்கு அவனைப் பிடிக்க வில்லையா? என்று துணிந்து கேட்டு விட்டேன். அவள் கண்கள் நீரை உதிர்த்தன. முத்து எப்படி இருக்கும் என்பதை நான் சரியாகப் பார்த்தது இல்லை. அந்தக் கண்ணிரில் அதைப் பார்க்க முடிந்தது. 'கணவன் அழகாக இல்லை என்று எந்தப் பெண்ணும் ஒதுக்கியது இல்லை. ஒதுக்கவும் மாட்டாள்" என்று தத்துவம் பேசினாள். இது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஆண் கள் பலர் மனைவி அழகாக இல்லை என்று கூறி ஒதுக்கு வதைப் பார்த்து இருக்கிறேன். பெண் தனக்கு அழகு இல்லை என்பதற்காக வருந்தத்தான் செய்கிறாள். ஆனால் அவளுக்கு உணர்வு என்பதனைப் படைப்பில் ஏற்படுத்திய பிறகு எப்படி அவளால் தனித்து வாழ முடியும். எப்படி யாவது அவள் தாயாக வேண்டும் என்று துடிக்கிறாள். அதற்கப்புறம் அந்தக் குடும்பங்கள் சரியாகப் போய் விடுகின்றன. இரண்டு மூன்று குழந்தைகளுக்குத் தாயாகி விடுகிறாள். அதற்கப்புறம் அவள் தான் ராணி. அவன் சேவகன். கதையே மாறிவிடுகிறது. மனைவி அழகாக இருப்பதை ஒவ்வொரு ஆடவனும் விரும்புவான் என்று இதுவரை நினைத்து வந்தேன். அதுவே அவளுக்குப் பகையாக முடிந்தது என்று கேட்கும் பொழுது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் அழகிய உருவம் என் முன் ஒர் ஒவியமாகக் காட்சியளித்தது. ஒவ்வொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/79&oldid=772980" இலிருந்து மீள்விக்கப்பட்டது