பக்கம்:நனவோட்டங்கள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 : ரா. சீனிவாசன் எப்படியாவது வளைத்துக் கொள்ள வேண்டும். அவளும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள். பிரபு அவளுக்குப் புதிய உத்வேகத்தைக் கொடுத்து விட்டான் என்றுதான் கூறமுடியும். அவனை நினைத்துப் பார்க்கிறாள். இந்தக் கிழட்டுப் புலி வாலை ஆட்டுவது அவளுக்குப் பிடிக்கவில்லை. எடுத்தாள் பில்ட்டு'; விளாசினாள்; பாவம் அவர் மனம் திருந்திவிட்டார். பெண்கள் இப்படி முரட்டுத்தனமாக மாறும்பொழுது ஆண்கள் மாறி விடுகிறார்கள். அவருக்கு அது வாழ்க்கையில் ஒரு படிப்பினை. இனிமேல் கங்காவின் ஜோலிக்குப் போவது இல்லை என்று ஒரு முழுக்குப் போட்டு விட்டார். கங்காவாக நடித்தவள் லட்சுமி, அதைச் சொல்ல மறந்துவிட்டேன். நான் ஏன் இந்தப் படத்தைப் பற்றி நினைத்தேன் என்பது எனக்கே புரியவில்லை. என்னமோ அந்தப் படம் அந்தக் காட்சி நினைவுக்கு வந்தது. குமுதத்தில் வந்த விமரிசனமும் பாராட்டத்தக்கதுதான். டெலிபோனில் அவள் மூன்று தரம் பேசுகிறாள். ஒவ்வொரு தடவையும் அவள் உணர்ச்சி வெளிப்படுவது பிரமாதம். மூன்றாவது தடவை உச்சநிலையை அடைந்துவிட்டது. பிரபு அவளிடம் தோற்றுவிடுகிறான். நடிக்க முயல்கிறான். முடியவில்லை. லட்சுமி கங்காவுக்காகவே பிறந்துவிட்டாள் என்று யாரோ அங்கே பேசிக்கொண்டிருந்தார்கள். நானும் பார்த்து இருக்கிறேன். சட்டைக்காரி பிரமாதம். அப்பொழுது நானும் நினைத்தது உண்டு. அதற்கு அவள்தான் சரியான நடிகை. அது மலையாளப் படம் அதுகூட மறந்து விட்டது லட்சுமி நடித்ததால் அது தமிழ்ப் படமாகவே என் மனத்தில் நின்றுவிட்டது. அவள் திக்கற்ற பார்வதியில் நடித்திருக்கக் கூடாது என்று தோன்றியது. ஆனால் அவள் நடிப்பு அதிலேதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/8&oldid=772981" இலிருந்து மீள்விக்கப்பட்டது