பக்கம்:நனவோட்டங்கள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ல் ரா. சீனிவாசன் சுளையாக நுகர வேண்டிய கனியை அவன் கடித்து உமிழ்ந்தான் என்பது தான் எனக்குப் பட்டது. கரும்பின் சாற்றைச் சுவைத்து நுகர்ந்த பின் தான் அதனைத் துப்புவதைக் கண்டிருக்கிறேன். அதன் துணிப்பகுதியை மட்டும் கடித்துப் பார்த்து விட்டுக் கசக்கிறது என்று சொல்வது போல அவள் கதை எனக்கு இருந்தது. "நான் சிரிப்பேன்" இது அவள் என்னிடம் சொல்லியது. "நான் சிரித்தால் அவன் முகம் உடனே சிணுங்கும். நீ இப்படித்தானே மற்றவர்களிடமும் சிரிப்பாய்” என்று கேட்பானாம். இது புதுவகை ஊடலாக எனக்குப் பட்டது. "நான் கண்ணுக்கு மையிடுவேன். அது யாரை மயக்க? என்று கேட்பான்." "ஏன் அவனுக்கு இந்தப் புத்தி வந்தது?" "அவனுக்கு என்ன்ை அனுபவிக்கத் தெரியவில்லை." அவள் அவ்வாறு கூறியது எனக்குப் பச்சையாகவே பட்டது. வெறுப்பில் இதுபோலச் சொற்கள் வருவது இயற்கை என்பதைப் பார்த்திருக்கிறேன். ஒவியத்தைக் கலைஞன்தான் இரசிக்க முடியும்; மற்ற வர்களுக்கு அது வெறும் படமாகத்தான் தெரியும். போகட்டும் படமாகவாவது மதித்து அவன் கண்ணாடி போட்டு மாட்டித் தன் வீட்டில் வைத்திருக்கலாமே என்று நினைத்துக்கொண்டேன். "நீ இப்பொழுது யார் வீட்டில் இருக்கிறாய்?" "என் அம்மா வீட்டில், எனக்குத் தம்பி ஒருவன் இருக்கிறான். அவன் படிக்கிறான். தங்கை ஒருத்தி இருக்கிறாள். அவள் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருக்கிறாள். அப்பா சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/80&oldid=772982" இலிருந்து மீள்விக்கப்பட்டது