பக்கம்:நனவோட்டங்கள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 79 வந்தவர். அவர் லஞ்சமே வாங்கியது இல்லையாம். நல்ல பெயராம். அப்படிச் சொல்லிக் கொள்கிறார். இப்பொழுது யாரும் அவரை மதிப்பதில்லை. அவள் அப்பாவைப்பற்றிக் கேட்பது எனக்குச் சுவராசியமாக இருந்தது. "இப்பொழுது அவருக்குப் பென்ஷன் வருகிறதா?” என்று கேட்டேன். "எல்லாம் சேர்ந்து அறுநூற்று எண்பது ரூபாய் வருகிறது. அம்மா, நான், தங்கை, தம்பி அத்தனை பேரையும் அவர் காப்பாற்ற வேண்டும். நான் சம்பாதித்த பிறகு தான் வீடு கலகலப்பாக இருக்கிறது. டெலிவிஷன் கூட வாங்கி வைத்திருக்கிறோம்” என்று ஒருவிதமாக அந்தக் குடும்பத்தைப் படம் பிடித்துக் காட்டினாள். "ஏன் அவசரப்பட்டுக் கலியாணம் செய்து விட்டார்கள்?" "அது அவர் செய்து கொள்ளவில்லை. அவர் அப்பா செய்து வைத்தார்." "உங்கள் வீட்டில்?” “என் அம்மா செய்து வைத்தாள். அவளுக்கு நெருங்கிய உறவுக்காரன். இப்பொழுதுகூட அம்மா அவருக்காகக் கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்காமல் பேசுவாள்.” மேலும் தொடர்ந்தாள். "எனக்கு ஒன்றுமே தெரியாது. நான் அப்போது பி.யூ.சி. தான். நான் இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். எனக்கு எத்தனையோ வாய்ப்புகள் கிடைத்தன. எல்லாம் தப்பு என்று நினைத்து வாழ்ந்துவிட்டேன். நான் பஸ்ஸிலே போனால் யாராவது என்னைப் பின்தொடர்வார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/81&oldid=772983" இலிருந்து மீள்விக்கப்பட்டது