பக்கம்:நனவோட்டங்கள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ( ரா. சீனிவாசன் அதை முன்னால் ரசிப்பேன். இப்போது அஞ்சுகிறேன்" என்றாள். இரண்டு சுவைகள் அவளிடம் மோதின. அப்போது ரசனை. இப்போது அச்சம். "அது தப்பு இல்லையா?" "நான் எதுக்குச் சொல்கிறேன் தெரியுமா? அப்பொழுது எல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது. அதிலே ஒருத்தரைக் காதலித்து இருக்கக் கூடாதா என்று நினைக்கிறது உண்டு.” நான் பேசவில்லை. என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவளே தொடர்ந்து பேசினாள். "அழகை ரசிக்கத் தெரிந்தவனுக்கு நான் வாழ்க்கைப் படவில்லையே என்று வருந்துகிறேன். நான் ஒரு லட்சிய மனைவியாக இருந்தேன்; அவன் என்னை அலட்சியப் படுத்தினான். என்னை அவனுக்கு அடிமைப்படுத்தினேன். அவன் என்னைக் கொடுமைப்படுத்தினான். நான் அவனுக்கு என் அழகைத் தந்தேன். அவன் எனக்கு அழுகையைத் தந்தான். ஆண்டவன் ஏன் எனக்கு அழகைத் தந்தாய் என்று இறைவனிடம் முறையிட்டேன். நல்ல ஒரு வீணை. அவன் அதைப் புழுதியில் எறிந்தான். அவன் ஒரு நாள் வாய் திறந்து கேட்டான். நீ என்னை எப்ப்டி விரும்புகிறாய்? நான் அழகாக இல்லையே என்றான். அதுதான் கடைசி. வீணையைத் தொடவும் அவனுக்கு அருகதை இல்லை. என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. "சீ.! நீ ஒரு மனிதனா? எழு! போ! என் கட்டிலில் உனக்கு இடம் இல்லை." என்றேன். அவன் வெறிகொண்ட மிருகமானான். என்னை அசிங்கப்படுத்தினான். அது எனக்குப் பிடிக்கவில்லை. மறுபடியும் அவனிடம் அவன் கேட்ட கேள்வியைத் திருப்பிக் கேட்டேன். "நீ என்னை விரும்புகிறாயா?" என்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/82&oldid=772984" இலிருந்து மீள்விக்கப்பட்டது