பக்கம்:நனவோட்டங்கள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 81 அவனுக்கு அப்பொழுது பசி இல்லை. "எனக்குத் தேவையில்லை" என்றான். எதற்காக நான் அவனை விரும்பவேண்டும். அவன் அழகால் என்னைக் கவரவில்லை; அன்பால் என்னை அணைக்கவில்லை. ஆசையால் என்னைத் தழுவவில்லை. விரும்பி என்னிடம் பேசியது இல்லை. காதலால் என்னை நெருங்கியது இல்லை. அவன் என் கணவன். நான் அவன் மனைவி. அதாவது அவன் தாலி கட்டிய மனைவி. அந்த ஒரு புனிதமான உறவுக்காகத்தான் இன்னும் அவனைப் பற்றி நினைக்கிறேன். குருடனிடம் சித்திரத்தைத் தந்தால் அவன் அதைத் தடவிப் பார்ப்பான். அவனுக்கு எதுவும் தட்டுப்படாது. ரசிக்கத் தெரியாது. சித்திரத்தை ரசிக்காவிட்டாலும் பரவாயில்லை. அதைச் சித்திரவதை செய்யாமல் இருந்தால் போதும்." இதைப்போன்ற செய்திகளை அவ்வப்பொழுது என்னிடம் சொல்லியிருக்கிறாள். தொடர்ந்து சொல்லா விட்டாலும் அவ்வப்போது பேசியதைக் கோவையாக வைத்துப் பார்க்கிறேன். 'நீ அவனை விவாகரத்து செய்துகொள்ளக் கூடாதா?" என்று அவசரப்பட்டுக் கேட்டுவிட்டேன். அவள் என்னை விழுங்குவது போல் பார்த்தாள். அதற்குப் பிறகு நான் அவளை ஏற்றுக்கொள்ள முடியுமா என்று அவள் கேட்பதுபோல் இருந்தது. அவள் பார்வை யிலிருந்து விலக முயன்றேன். திக்கு முக்காடினேன். "உன் அப்பா சப்-இன்ஸ்பெக்டர் என்கிறாயே! அவனைத் திருத்தக்கூடாதா?” - அவள் சிரித்தாள். அவர் பழகிய மனிதர்கள் பெரும் பாலும் குற்றவாளிகள்தாம். குற்றவாளிகளைத் திருத்த முடியாததால்தான் அவர்களைச் சிறைப்படுத்துகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/83&oldid=772985" இலிருந்து மீள்விக்கப்பட்டது