பக்கம்:நனவோட்டங்கள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ரா. சீனிவாசன் தீமையைக் கட்டுப்படுத்த முடியுமே தவிரத் தடுக்க முடியாது. அவர் இப்பொழுது பொய் மதிப்பிலும் மரியாதையிலும் வாழ்கிறார். அவர் வேலை செய்த காலத்தை நினைத்துக்கொண்டு பார்க்கிறார். கான்ஸ்டபிள் தூர வரும்போதே 'சல்யூட் அடிப்பான். எங்கும் மரியாதை. அவர் வேலை நீங்கிய பிறகு யார் மதிக்கிறார்கள். அவரிடம் பேசவே மாட்டார்கள். வீட்டிலேயே அவர் ஒதுங்கியே வாழ்கிறார். ஒய்வு பெறுபவர்களிடம் காணும் தனிப் பண்பு அவரிடமும் காணப்படுகின்றது." "அம்மா வருந்தவில்லையா?" "அவள் எப்பொழுதும் குத்திக்கொண்டே இருப்பாள். எப்படியாவது நான் அவனோடு வாழவேண்டும். இந்த வீட்டை விட்டுப் போகவேண்டும். அவன் அடித்தாலும் உதைத்தாலும் அவன் காலடியில் விழுந்து கிடக்க வேண்டும் என்று. நான் இப்போது நினைக்கிறேன் அவனோடு வாழ முடியாது என்று." "இப்படியே இருந்துவிட முடியுமா? இது என் கேள்வி. அவசியமில்லாத ஆனால் அவசரமாக எழுந்த கேள்வியாக இருந்தது. "அதே கேள்விக்குத்தான் பதில் தேடுகிறேன். அதற்காகத்தான் உங்களை அவர்கள் படம் பார்க்கச் சொன்னேன்.” என் நிலைமை எனக்குப் புரியவில்லை. துணிந்து காதல் செய்யும் காதலன் நிலையில் இருக்கிறேனா? அல்லது அவளைச் சுற்றி வட்டமிட்டு ஏங்கி நிற்கும் 'கமலஹாசன் நிலையில் இருக்கிறேனா? தெரியவில்லை. "அந்தக் கதை முடிவு சரியாக இல்லை?" என்றேன் நான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/84&oldid=772986" இலிருந்து மீள்விக்கப்பட்டது