பக்கம்:நனவோட்டங்கள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 83 "வேறு எப்படி முடிந்திருக்க வேண்டும்” என்று கேட்டாள். "கமலஹாசனை மணம் செய்து கொண்டிருக்கலாம்" என்றேன். "இது அடுத்த எல்லை. பெண் தன்னை உதாசீனப் படுத்துபவனையும் விரும்பமாட்டாள். தன்னை வழிபட்டு ஏங்குபவனையும் விரும்பமாட்டாள்" என்று தன் முடிவைக் கூறினாள். "அப்படியானால் அவள் தன் காதலனை மணந்து கொண்டிருக்க வேண்டும்" என்றேன். "அது அவள் நிலையைக் கடந்துவிட்டது; சூழ்ச்சி வென்று விட்டது" என்றாள். - "குழந்தைக்குத் தாயாக இருப்பதுதான் நல்லது. கதை முடிவு அழகாக இருக்கிறது” என்றேன். "வேறு வகையாக முடித்திருந்தால் ‘செண்டிமெண்டு’ அந்தப் படத்துக்கு எதிராக அமைந்திருக்கும். சில நாள் கூட ஒடி இருக்காது." "வாழ்க்கையில் நடக்கும் தவறுகளையாவது ஏற்றுக் கொள்வார்கள். கதையில் நடக்கும் தவறுகளை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்." என்றேன் நான். நாவல் படித்த அனுபவத்தில் இவ்வாறு கூறினேன். "அவள் குழந்தைக்குத் தாய் என்று காட்டிவிட்டு வேறு எப்படி முடிவு கூறமுடியும். அந்தப் படம் எனக்கு விடை தரவில்லை." என்று முடிவு கூறினாள். அதை அவளைத் தாய்மையில் முடித்துவிட்டது. நல்ல காலம் உஷா தாயாகவில்லை. அவள் வாழ்க்கை அவ்வளவு விரைவில் அஸ்தமித்து விடாது, குழந்தைக்குத் தாயாகிவிட்டால் பெண்மையே அடங்கி விடுகிறது என்பது அவள் சித்தாந்தம். கதாசிரியர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/85&oldid=772987" இலிருந்து மீள்விக்கப்பட்டது